காதல்

என் பத்து வார்த்தைகளும்
உன் ஒத்தை வார்த்தைக்குத்
தவித்திருக்கும்

என் ஒப்பனைகள் அனைத்தும்
உன் ஒரு பார்வைக்குத்
தவமிருக்கும்

என் பார்வைகள் எல்லாம்
உன் இரு கண் அசைவிற்குத்
பார்த்திருக்கும்

என் கால்கள் இரண்டும்
உன் கால்களுடன் பயணப்பட
காத்திருக்கும்



அகிலா

எழுதியவர் : அகிலா (9-Jun-19, 4:31 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 326

மேலே