நூறாண்டுக்கு ஒருமுறை பூத்திடும் காதல்
நூறாண்டுக்கு ஒருமுறை பூத்திடும் காதல்
என் மன்னன் வாழும்
என் நெஞ்சில்
என் கண்ணன் வாழலாமா
அச்சம் கொண்ட பெண்மை
நித்தம் வாடலாமா...;
மன்னன் வந்தான்
தானும் கண்ணன் என்றான்;
கொஞ்சிடும் நாதம் நெஞ்சத்தில்
பொங்கிடும் இன்பம் மஞ்சத்தில்;
என் மன்னனில்
என் கண்ணனின் நிழல் கண்டேன்;
பெண்மை நான்
அவன் தாள் பணிந்து நின்றேன்!
கிருஷ்ணா!
உம் மீது ராதே கொண்டாள் தெய்வீக காதல்
என் மன்னன் மீது நானும் கொண்டேன் புனிதக் காதல்;
மாசி மாசம் மலர்ந்த என் காதல் கதையை
மாமன் உமக்கு சொல்வேன் நானே
என் தாய் மாமன் சாய் கிருஷ்ணா உமக்கு சொல்வேன் தானே;
தேடினேன் அன்பின் ஊற்றை பாரினில்
கண்டேன் தாய்மையின் பண்பை காதலில்
உணர்ந்தேன் சுவாமி உமது விம்பத்தை உயிர்த்தோழனில்
நனைகின்றேன் உமது அருள் மழையில்!
உண்மை அறிவாயோ என் சாயி கிருஷ்ணா!
வாழ்வின் கசப்பான நினைவுகள்
காதல் தரும் புத்துணர்வுக்கு
முன்னால் தோற்று நிற்க;
வாலிப மனம்
நடந்ததை நினைக்க
ஞாபகங்களை மீட்டி பார்க்க;
சீண்டல்களும் ஊடல்களும்
வயோதிபத்தில் தொடர;
தெய்வீக காதல் பள்ளியின்
அனுமதி விண்ணப்பம் வேண்டி கியூவில்
அன்பு மொழி பேசும் மழலை ஒன்று!
~ நியதி ~