நிறமில்லா அமிழ்து
மண்ணில்லை! மரமில்லை!
மழையில்லை! வளியில்லை!
புனல் பொழியும் முகிலில்லை!
மார்பினிலும் பால் இல்லை!
உமிழி நாவில் சுரப்பில்லை!
கதறி அழ நானினைத்தும்
கண்களிலே நீரில்லை!
தெருவெல்லாம் பெருவெள்ளம்
போனபோதும், துளிநீரைப்
பருகிடவும் இயலவில்லை!
தெருவெல்லாம் குடம் வைத்துத்
தேடுகிறோம்; இன்றும் துளிநீரைக்
கண்களிலே காணவில்லை!
பாலாறு பலகோடி விலைபோனது!
வைகையுமே மணல் அள்ள மலடானது!
தாமிரவருணி கார்ப்பரேட்டின் குளமானது!
காவிரியில் நீர்வந்தும் நாளானது!
இந்நிலையே நிலையென்றால் என்னாவது?
தலைநகரின் நிலையின்றோ தடுமாறுது!