ஏமாந்து ஏமாந்து
பறந்து பறந்து
விளக்கொளியில் விழுந்து மடிந்தது
விட்டில் பூச்சி
ஒளி உணவல்ல என்று புரியவில்லை
ஓடி ஓடித் திரிந்து
சோர்ந்து மயங்கி விழுந்தது
மான்
கானல் நீரென்று புரியவில்லை !
அமர்ந்து அமர்ந்து பார்த்து
இலவம் பஞ்சாய் வெடிக்கும்வரை
கிளிக்கு
பஞ்சு பழமில்லை என்று புரியவில்லை !
இப்படித்தான் அரசியலிலும்
நம்பி நம்பி ஒட்டுப் போட்டு
பாவம் மக்கள்
விட்டிலாய் மானாய் கிளியாய்
ஏமாந்து ஏமாந்து ................