காதல்

இதோ இது நீ
வாங்கித் தந்த
முதல் புடவை

இதோ இது நீ
தாலி கட்டியபோது
நான் கட்டிக்
கொண்ட புடவை

இதோ இது நம்
முதலிரவில் நீ
எனக்களித்து நான்
உடுத்திய புடவை

இதோ இது நம்
தேனிலவில்
தேடித் தேடி
வாங்கிய புடவை

இதோ இது என்
பிறந்தநாளில் நீ
எனக்களித்த புடவை

இதோ இது நம்
மணநாளுக்கு நீ
பரிசளித்த புடவை

இதோ இது
என் உடல் உன் உயிரைச்
சுமந்தபோது நீ
வாங்கித் தந்த புடவை

என் ஒவ்வொரு
புடவையும் கூட
உன்னைத்தான்
அனிந்துகொன்டுள்ளது

அகிலா

எழுதியவர் : அகிலா (18-Jun-19, 10:28 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 417

மேலே