சிறு நூல் நான்..

காலைக்கனவு பலிக்குமென்றால்..
கனவில் உன்னைக் கண்டிருப்பேன்
இரவுக் கனவு பலிகாதென்றால்
இரவில் எப்படி பார்த்திருப்பேன்
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
மறந்தாயோ அன்பே அஞ்சலியை இன்று
கண் மூடி திறக்கின்றேன் காணவில்லை
கண்களில் காட்சி ஏதுமில்லை
மைவிழி இரண்டும் மூடவில்லை
மறுபடி கனவுக்கே வழி இல்லை
உன்னை ஒரு முறை தரிசிக்க வழி சொல்லடா
என் உரிமைக்கு நீ மட்டும் துணை நில்லடா
சிரிக்கின்ற சிரிப்பிலே சேதி சொன்னாய்
நான் சிந்திக்க பிறந்தாயோ நீ ஆணாய்
தூக்கத்தில் சிரிப்பது என் வாழ்க்கை
துக்கத்தை கொடுப்பது ஆண் வாழ்க்கை
ஈருயிர் சுமப்பது இல்வாழ்க்கை
இருப்பவன் சுமப்பானா பல்லக்கை?
தூரத்தில் நின்ற சேதியொன்று
நான் உன் சிரிப்பில் சிக்கிய சிறு நூல்துண்டு..

எழுதியவர் : (6-Sep-11, 3:03 pm)
சேர்த்தது : saige
பார்வை : 383

மேலே