ரேனுஸ்ரீ-பகுதி 11

அடுத்த மாதம் முலாண்டு பரிட்சை வர இருப்பதால் ஆசிரியர் அனைத்து படத்தையும் நடத்தி முடித்திருந்தார்,அதன் காரணமாக தினமும் வகுப்பிற்கு வெளியே குழு குழுவாக அமர்ந்து படித்து விட்டு அவர் அவர் குழு தலைவர்களிடம் வொப்பிக்குமாறு கூறினார்.
எங்கள் குழுவில் என்னையும் சேர்த்து ஆறு பேர் இருந்தனர்,எங்கள் குழு தலைவி(group leader ) பானு ஆவாள்,ஒரு நாள் வகுப்பிற்கு வெளியே என் குழுவோடு வட்டமாக உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் போது பானு என்னை அவள் பக்கத்தில் வந்து உட்காருமாறு கூறி அழைத்தால்,சரி என்று அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தேன்,அமர்ந்த பிறகு தான் காரணம் என்னவென்று புரிந்தது,இடத்தை மாற்றிய பிறகு என்னால் ஸ்ரீ அவனுடைய வகுப்பிற்கு வெளியே உள்ள படிக்கெட்டில் தனியாக உட்கார்ந்து படித்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
நான் பானுவை பார்த்து முறைத்தபடி புன்னகித்தேன்,அவள் அசட்டு தனமாக சிரித்தபடி"இல்ல...,ஸ்ரீ அண்ணாவால உன்னோட முகத்த பாக்க முடிலனு சொன்னாரு அதா"என்று கூறினால்.

ஸ்ரீ புத்தகத்தை முகத்திற்க்கு நேராக வைத்து படிப்பது போல அவ்வபோது புத்தகத்தை கீழே இறக்கி என்னை பார்த்தபடி இருந்தான்.
அதை கண்ட நான் பானுவை பார்த்து"இப்பதா தெரியுது,ஸ்ரீ அவரு எப்படி first rank வாங்கறாருனு"என்று கூறினேன்.
அவள் என்னை வினோதமாக பார்த்த படி "எப்படி?"என்று கேட்டால்.
ம்ம்...புக்க(book ) எப்படி வெச்சு படிக்குறாருனு நீயே பாரு என்று கூறினேன்.
அவள்,ஸ்ரீ புத்தகத்தை தலைகீழாக வைத்திருப்பதை உற்று பார்த்துவிட்டு
சிரித்தால்,பின்பு நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம்,நாங்கள் இருவரும் எதற்காக சிரிக்கிறோம் என்று புரியாமல் அங்கிருந்தவர்கள் எங்களை குழப்பத்தோடு பார்த்தார்கள்.
பிறகு இருவரும் சிரித்து விட்டு மீண்டும் ஸ்ரீயை பார்த்தோம்,ஸ்ரீ அவனுடைய ஆசிரியர் அருகில் வந்து நிற்பது கூட தெரியாமல் எங்கள் இருவரையும் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்,ஆசிரியரின் பார்வை ஸ்ரீயிடம் இருந்து எங்களின் பக்கம் திரும்பியது,நானும் பானுவும் ஏதும் தெரியாதது போல தலையை குனிந்து புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தோம்.
பிறகு மீண்டும் பார்த்தபோது ஸ்ரீயின் ஆசிரியர் ஸ்ரீயிடம் ஏதோ கேட்டு கொண்டிருந்தார்.
ஓய்,பானு,என்று அழைத்தேன்.
ம்ம்..?என்றால்.
அங்க என்ன நடக்குது என்று கேட்டேன்.
அவள் பார்த்துவிட்டு "யாருக்கு தெரியு,வெளிய உட்கார்ந்து என்ன பண்றனு கேக்குறாருனு நினைக்குற".
ஸ்ரீ என்னவோ சொல்லறாரு.
ம்ம்ம்,படுச்சுட்டு இருந்தனு சொல்லுவாரு,வேற என்ன சொல்லுவாரு.
சார் புக்க காமிச்சு ஏதோ கேக்குறாரு?என்று பானுவை பார்த்து கேட்டேன்.
அவள் சிரித்தபடி "எ பா தம்பி,உங்க ஊர்ல புக்க தலகீழதா வெச்சு படிப்பாங்களானு கேக்கறாருனு நினைக்கிற"என்றால்.
நான் பானுவை பார்த்து புன்னகைத்தபடி "ஸ்ரீ அதுக்கு என்ன சொல்லுவாரு?" என்று கேட்டேன்.
அவள் என்னை முறைத்து விட்டு,ஆமா..என்ன பாத்தா உனக்கு வாய்ஸ் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மாரி தெரியுதா என்ன என்று கேட்டால்.
பானுவை விளையாட்டாக கோவித்தபடி ஸ்ரீயை பார்த்தேன்.
நானும்,பானுவும் பார்த்த போது ஸ்ரீயின் ஆசிரியர் ஸ்ரீயின் காதை பிடித்து திருவியபடி வகுப்பிற்குள் அழைத்து சென்றார்.
ஐயோ! உள்ள கூட்டிட்டு போய் அடிப்பாரா!?என்று பானுவை பார்த்து கேட்டேன்.
அதற்க்கு அவள் இல்லை என்பது போல தலையை ஆட்டியபடி"ஸ்ரீ அண்ணாவோட சாருக்கு ஸ்ரீ அண்ணா favourite studient ,அதனால அடிக்கலா மாட்டாரு.
எனக்கு தெருஞ்சு உள்ள கூட்டிட்டு போய் புக்க தல கீழா வெச்சு படிக்குற வித்தைய எல்லாருக்கு சொல்லித்தர சொல்லி கேப்பாருனு நினைக்கிற என்று முகத்தை தீவிரமாக வைத்தபடி கூறினால்.
அவள் கூறியதையும்,கூறிய விதத்தையும் கண்டு எனக்கு சிரிப்பு வந்தது,பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம்.

அன்றைய தினம் மிக அழகாக இருந்தது,மழை மேகங்கள் வானை நிறைத்திருந்தது,மெல்லிய இதமான தென்றல் வீசியபடி இருந்தது,தென்றலின் தீண்டலால் மரங்கள் பூக்களை தூவியது,அவ்வபோது மேகங்கள் பன்னீர் தெளித்து விளையாடியது,பூமி தனது மண் மணத்தினால் மனதை இதப்படுத்தியது,இயற்கை அதன் பேர் அழகினால் அனைவரையும் தன்மிது காதல் கொள்ள செய்தது.அன்று பள்ளி முடிந்து இயற்க்கையின் அழகை ரசித்தபடி பானுவுடன் பள்ளியை விட்டு வெளியே வந்தேன்,அப்போது ஸ்ரீயும்,அவனுடைய தம்பியும் நின்றுகொண்டிருப்பதை பார்த்தோம்,ஸ்ரீ அவனுடைய தம்பிக்கு தண்ணீர் பாட்டிலை(water bottle )பையில் இருந்து எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தான்,பானு என்னை அழைத்துக்கொண்டு ஸ்ரீயின் அருகில் சென்றால்,எங்களை பார்த்த ஸ்ரீ பானுவை பார்த்து ஹெ.. என்று கூறினான்,பானு புன்னகித்து விட்டு "சைக்கிள் எங்க?" என்று கேட்டால்
சைக்கிள் ரிப்பேரிக்கு(repair )குடுத்திருக்கு,என்று கூறினான்.
பிறகு நால்வரும் ஒன்றாக நடந்து சென்றோம்,நான்,என் பக்கத்தில் பானு,பானுவின் பக்கத்தில் ஸ்ரீ,ஸ்ரீயின் பக்கத்தில் ஸ்ரீயின் தம்பி என நால்வரும் நடை போட்டுக்கொண்டிருந்தோம்.
சிறிது தூரம் சென்ற பிறகு பானு,ஸ்ரீயிடம் annual exam க்கு இன்னொ 10 நாள்தா இருக்கு என்று கூறினால்.
ஸ்ரீ ஆம் என்பது போல அவன் தலையை ஆட்டினான்.
நான் ஸ்ரீ எங்களோடு நடந்து வருவதை நினைத்து மனதிற்குள் அனந்த பட்டுக்கொண்டிருந்தேன்.

ம்ம்ம்ம்...எக்சாமுக்கு எல்லா படுச்சாச்சா என்று சிறு தயக்கத்துடன் மெல்லிய குரலில்,தன்மையாக ஸ்ரீ கேட்பது காதில் விழுந்தது.

ஸ்ரீயின் குரல் மென்மையாகவும்,இனிமையாகவும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்,அப்போது பானு அவள் கையால் என் கையை இடித்து உன்னதா கேக்குறாரு என்று கூறினால்.

திடீர் என இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது,மூளையின் இயக்கம் நின்றது போல இருந்தது,மூளையில் ஏதும் ஓடவில்லை,பதட்டத்துடன் "ம்..!?"என்று கேட்டு ஸ்ரீயை பார்த்தேன்.

எக்சாமுக்கு எல்லா படுச்சாச்சா?என்று மீண்டும் என்னை பார்த்து கேட்டான் ஸ்ரீ.

படித்து ஆகிவிட்டது என்பது போல வேகமாக தலையை ஆட்டினேன்.

எப்படி?நல்ல படிப்பியா?என்று ஆர்வமாக கேட்டான் ஸ்ரீ.

யாரு நா தான?என்று சலிப்போடு மனதில் நினைத்தபடி முகத்தில் சிறு சுளிவுகளுடன் "ம்..,சுமாரா படிப்ப" என்று கூறினேன்.

ஸ்ரீ என்னை பார்த்து புன்னகித்து விட்டு,உன்னோட full நெமே ரேணு தான என்று கேட்டான்.

ஸ்ரீ அவ்வாறு கேட்டதும் பானு ஸ்ரீயை "உன்னக்கு ரேணுவோட full name தெரியாது?"என்று கேட்பது போல அவனை முறைத்து பார்த்தால்.
ஸ்ரீ பானுவை திருட்டு முழியுடன் பார்த்து விட்டு,தயக்கத்துடன் என்னை பார்த்தான்.
நான் இருவரையும் பார்த்து புன்னகித்து விட்டு,ஸ்ரீயை பார்த்து இல்லை என்பது போல தலையை ஆட்டிவிட்டு "ரேனுஸ்ரீ"என்று என் முழு பெயரை கூறினேன்.

பிறகு ஸ்ரீயும் நானும் ஒருவரை ஒருவர் வெட்கத்தோடு ஒரு பார்வை பார்த்து விட்டு வேறு திசையை பார்த்தபடி தலையை திருப்பிக்கொண்டு அமைதியாக நடக்க ஆரம்பித்தோம்.

என் முழு பெயரை ஸ்ரீயிடம் கூறிய பிறகு ஏனோ என்னால் ஸ்ரீ இருக்கும் பக்கம் கூட திரும்ப முடியவில்லை,அவனை நேரடியாக பார்ப்பதற்க்கு தயக்கமாக இருந்தது.
அப்போது பானுவின் கையும் என்னுடைய கையும் நடக்கும் போது எதிர்ச்சியாக மோதியது,அப்போது நான் என் சுண்டு விரலால் பானுவின் சுண்டு விரலை பிடித்தேன்,பிடித்த மறு கணம் இது பானுவின் கை இல்லை என்பது போல தோன்றியது,மூளை எச்சரித்து என்னை பார்க்க கூறியது,நான் பார்த்த போது என் பக்கத்தில் ஸ்ரீ இருந்தான்.
இருவரும் ஒரே சமயத்தில் பார்த்துக்கொண்டோம்,உடனடியாக நான் அவன் கையில் இருந்து என் கையை தூரமாக எடுத்துக்கொண்டேன்.
பிறகு இருவரும் பானு எங்கே என்பது போல குழப்பத்தோடு பார்த்து விட்டு பின்னால் திரும்பி பார்த்தோம்,நாங்கள் பார்த்தபோது பானு அவள் வாயில் கை வைத்த படி சிரித்துக்கொண்டிருந்தால்,நான் பானுவை பார்த்து முறைத்து விட்டு ஸ்ரீயை தயக்கத்தோடு பார்த்தேன், நான் பார்த்தபோது ஸ்ரீயும் என்னை போலவே பானுவை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்,பிறகு பானு எங்களை பார்த்து அசட்டுத்தனமாக புன்னகித்தபடி மீண்டும் எங்களின் மத்தியில் வந்தால்,மீண்டும் நடக்க தொடங்கினோம்.

பானு என்று நினைத்து ஸ்ரீயின் கையை பிடித்துவிட்டோம்,ஸ்ரீ நம்மை தவறாக நினைத்திருப்பான என்று நினைத்தபடி நடந்து கொண்டிருந்தேன்,
கவலை ஒரு புறம் இருப்பினும் ஸ்ரீயின் கைகளை பிடித்ததை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.

சிறிது தூரம் சென்ற பிறகு நான் என் வீட்டிற்க்கு செல்ல வேறு திசையை மேற்கொள்ள வேண்டி இருந்தது,அதன் காரணமாக நடப்பதை நிறுத்தி விட்டு மூவரையும் பார்த்து "இதுக்கு மேல என்னால உங்க கூட வர முடியாது" என்று கூறி புன்னகித்தேன்.

ஓ நீ உங்க வீட்டுக்கு இந்த பக்கமா போகனு இல்ல என்று நான் போக இருக்கும் வழியை காட்டி கூறினால் பானு.
பிறகு சரி ஓகே பாய்(bye )நாளைக்கு பாக்கலா என்றால்.

நான் பானுவை பார்த்து புன்னகித்து விட்டு ஸ்ரீயை பார்த்தேன்.

ஸ்ரீ எதையோ யோசித்தபடி என்னை பார்த்து"நல்லா படிக்கனு,சரியா பாப்பா,"என்று கூறினான்.
நான் சரி என்பது போல தலையை ஆட்டினேன்.

7 th ல நீதா கிளாஸ் first டா இருக்கனு என்று கூறி பானுவை வெறுப்பேத்துவது போல பார்த்தான்.
எங்கள் வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுப்பது பானு தான்,அதனால் ஸ்ரீ எதற்காக அவ்வாறு கூறினான் என்று புரிந்தது,அதனால் நான் பானுவை பார்த்து வேடிக்கையாக புன்னகித்தேன்.
அவள் எங்கள் இருவரையும் விளையாட்டாக சலித்துக்கொண்டாள்,பிறகு சரி என்று கூறி மூவரையும் பார்த்து தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து சென்றேன்.

அன்றில் இருந்து பத்தாவது நாள் இறுதி பரிட்சை வந்தது,பரிச்சைக்கு படிப்பது,பரிச்சை எழுதுவது என்று நாட்கள் பரபரப்பாக சென்றது.
அன்று இறுதி பரிச்சையான சமூக அறிவியல் தேர்வு நடைபெற இருந்தது,ஸ்ரீ எங்களின் வகுப்பிற்க்கு வெளியே,வகுப்பு நுழைவாயிலை ஒட்டியபடி அவனுடைய மிதி வண்டியை நிறுத்திக்கொண்டிருந்தான்,நான் வகுப்பிற்குள் இருந்து அவனை பார்த்து கொண்டிருந்தேன்,இதுதான் ஸ்ரீ இப்பள்ளியில் இருக்கும் கடைசி நாள் ஆகும்,இதன் பிறகு நம்மால் ஸ்ரீயை காண முடியாது,ஸ்ரீ உயர்நிலை பள்ளிக்கு சென்றுவிடுவான் என்று நினைத்து வருந்தி கொண்டிருந்தேன்,திடீர் என ஸ்ரீ என்னை பார்க்க நான் பார்க்காதது போல திரும்பி கொண்டேன்,என்னால் ஸ்ரீயின் முகத்தை நேரடியாக காண முடியவில்லை,எங்கே அவனை கண்டால் அழுதுவிடுவேனோ என்று தோன்றியது.
மீண்டும் நான் பார்த்தபோது ஸ்ரீ அவன் வகுப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தான்.அவன் என் பார்வையில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக தூரம் சென்று கொண்டிருப்பதை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

பரிட்சை முடிந்த பிறகு தூரத்தில் இருந்தாவது ஸ்ரீயை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

தொடரும்....

எழுதியவர் : அனுரஞ்சனி (20-Jun-19, 1:32 am)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 178

மேலே