அவளும், அவனும்
' நிலவடி நீ எனக்கு , உந்தன் பார்வை
என் மனதில் தன்னொளி வீசி குளிர்விக்க
எந்தன் காதல் ஜூரமும் இறங்கியது
உள்ளம் குளிர ' என்றேன் , அதற்கவள்
' மன்னவனே நீ அறியாய், நான் ஆதவன்
உந்தன் பார்வையில் ஒளி பெற்று உன்மீது
அதை வீசும் நிலவுதான் நான் , நீ இல்லாது போனால்
எனக்கேது தனி ஒளி , அதனால் நீதானே என்றும்
என்னை வாழவைக்கும் ஆதவன் ' என்றாள்