வெள்ளாமை விளைஞ்ச பூமி

வெள்ளாமை விளைஞ்ச பூமி
வெய்யிலால் வாய் பிளக்க

வேலியில கூடு கட்டிய
வெள்ளைக் கொக்கு விக்கி நிற்க

காட்டுக்குள்ள திரிந்த வண்டு
கடும் வெம்மையால் மாண்டுவிட

ஊருக்கே நீர் கொடுத்த
ஊரணி இன்று காய்ந்துவிட

உறவும் பகையும் மறந்து பலர்
ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்க

இக்கடுமை மாறி இயல்பு நிலை வர
இயற்கையே நீ இளகி உருகி பொழியே வேண்டுமே.
--- நன்னாடன்.

எழுதியவர் : விளைஞ்ச பூமி (24-Jun-19, 9:48 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44
மேலே