காதல்

கருநீல கடலில் விளையும் முத்து
வெண்மை , வற்றா கடலின்
இதயமது
நீல வானில் வெண்ணிலவு
வான் கடலின் வெண்முத்து
தன்னொளி வீசும் வானின் இதயம்
காதலுக்கு வழி தெரியாது அலைந்த
என் இதயத்துள் வெண்முத்தாய்
வந்து முளைத்தாயடி காதலியே நீ
நிலவாய் குளிர் தந்து ,
பவள இதழ்கள் அலர்ந்து புன்னகைத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jun-19, 1:21 pm)
பார்வை : 112
மேலே