விரும்பியவை ஒன்றும் கிடைப்பதும் இல்லை நடப்பதும் இல்லை

நாம் விரும்பியவை ஒன்றும் கிடைப்பதும் இல்லை நடப்பதும் இல்லை!
நாம் விரும்பியவை எல்லாம் கிடைப்பதும் இல்லை.

நினைப்பவைகள் எல்லாம் நடப்பதும்மில்லை
பூமி பந்தில் விரும்பி நாம் வந்து பிறக்கவில்லை
தாயின் முலையில் விரும்பி நாம் பால் குடிக்கவில்லை
விரும்பி நாம் வாளரவில்லை வளர்க்கப்பட்டோம்.

விருப்பிய காரியங்கள் எல்லாம் நடக்கவும் இல்லை
ஆசைப்பட்டவைகள் எல்லாம் கிடைக்கவும் இல்லை
இந்த பூமியில் நாம் விரும்பி பிறக்காததை போல்
நடப்பவைகள் எல்லாம் நம் விருப்பம் இன்றியே நடக்கின்றன

இது யார் இட்ட கட்டளை மாற்றி அமைக்க முடியவில்லை
எல்லாமே எங்களை மாற்றி அமைக்கின்றன.
விருப்பங்கள் நிறைவேற மறுபிறப்புத்தான் வேண்டும்
எல்லாம் ஏற்று ஆகவேண்டும் இது உல நியதி
யான் செய்த பாவம் இந்த வையகத்தில் யாரும்செய்யகூடாது
மனிதனாய் பிறந்த குற்றத்திற்காக
மன்னிப்ப கோருகின்றேன் இந்த பிரபஞ்சத்திடம்..

எழுதியவர் : Anthanan (25-Jun-19, 7:23 pm)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 365

மேலே