கண்மணியே❤

கலங்காதே கண்மணியே
உன் உயிறோரம் என்னை வைக்கிறேன்
துடிக்காத என் மானே
துறவாக என் இதயம் தருகிறேன்

நீ அழாதே நான் நனைந்து போவேன்
நீ கரையாதே நான் தொலைந்து போவேன்

உன் உறவுகள் மொத்தம்
எந்தன் விழிகளுக்குள்...
உன் உணர்வுகள் கூட்டம்
என் செவிகளுக்குள்....
உன் தனிமைகள் யாவும்
எந்தன் மடியருகில்...
உன் கனவின் கருத் தோன்றல்
என் நரம்பின் ஒன்றினைப்பில்...
தலையாட்டு போதும் தசையாக இருக்கிறேன்...
தலைதூக்கிப் பாரு அன்பே
உன் உயிரில் சாய்கிறேன்.....(இஷான்💚)

எழுதியவர் : இஷான் (9-Jul-19, 1:47 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 926

மேலே