தேடலின் பயணம்
ஆங்காங்கே மழைத்துளிகள்
பெரிதாய் கூட கூட
எனக்குள் எழும் வலிகள்
இன்னல்ஙள் யாவும்
மறைந்திடவே
மெல்ல நனைந்திட்டேன்
என்னுள் ஏற்படும்
மாற்றங்கள் எண்ணிலடங்கா
கூற வார்த்தைகள் இல்லை
மெதுவாய் நகரும் இரவினையும்
பெரிதாய் தொடங்கும் தூரலையும்
ரசித்தே
மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்தேன்
அதோ எனக்கான விடியல்
சூரியன் பார்த்திட சில
காலத்தள்ளுதலில்
என் முதல் பயணம்
தொடங்கிவிட்டது
முதல் தளிராய்🌱
இப்படிக்கு
தேடுதலின்றி தவித்த விதை 🌱🌱🌱🌱