சிந்தும் புன்னகையில் ஏனிந்த மௌனம்

நீலவிழிகளில் நைலின் எழிலைப் பார்க்கிறேன்
நீந்துகின்ற கயல்களை அதில் ரசிக்கிறேன்
இமைகள் இரண்டும் மூடித் திறக்கும் போது
அந்தியின் அதிசயம் என் முன் நிற்க காண்கிறேன் !
சிந்தும் புன்னகையில் ஏனிந்த மௌனம்
சிவந்த இதழோடையில் அது என்ன புதிய சலனம் ?

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-19, 4:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 156

மேலே