கண்ணாடி பூக்கள்
கண்ணாடி பூக்கள்
சிறு சிறு உருளையாய்
பின்ணி பிணைந்து
இமைக்கும் நொடியில்
மறைந்து போகும் பூக்கள்
ஊது குழலால் அமுக்கி
எடுத்த கரைசல் !
வாயில் வைத்து ஊதி
வெளி கிளம்பும் உருளை
பூக்கள் !
வான் வெளி பறக்க
குழந்தைகளின் ஆனந்த
கூச்சல்..! உருளை பூக்களில்
உள்ளுக்குள் வண்ணமாய் நிறங்கள்
தொட்டவுடன் பட்டென
கையில் ஒட்டி கரையும்
துளி நீராய் !
கூவத்திலும் பூத்திடும்
இப்பூக்கள் !
சாக்கடைகளின் சந்திப்பினால் !
அருவியிலும் முளைத்து
வளர்ந்து மறையும்
சரமாய் கட்ட முடியாத
சூடி மகிழ முடியாத !
இந்த கண்ணாடி பூக்கள் !