அறிவிப்பு
கவிதை...
காற்றுக்குள் அலையும் பகல்.
உயிரில் ஸ்தம்பிக்கும் வாள்.
நகரும் மணல் துகளின் மூச்சு.
ஓசையில் கிடக்கும் மவ்னம்.
நடனத்தின் பேரொளி.
அழகில் படிந்திருக்கும் வாசனை.
ஓடும் குழந்தையின் தடம்.
குருட்டு இரவின் காதுகள்.
பேய் பிடித்த சிற்பம்.
ஓவியம் வரையும் கோலங்கள்.
நடுக்காடொன்றின் சிந்தனை.
மருந்தின் பைத்திய பார்வை.
இசையின் உடலுறவு.
மனதின் விந்து.
ஏவாளின் முலைப்பால்.
தெய்வத்தின் சொடுக்கு ஒலி.
தந்தையின் நிர்வாணம்.
இடுகாட்டில் சிதறிய காசுகள்.
மலையுச்சி பறவைகள்.
நிலவோடு நகரும் நிலம்.
ஒற்றை தூரலின் சத்தம்.
பொய்யனின் காக்கைப்பார்வை.
பனியில் உறையும் சூரியன்.
முதலைகள் மேய்க்கும் முயல்.
நண்பா..
இனியேனும் எழுது...
எனக்காக ஒரு கவிதை.