மண நாளும் மரண நாளும்

அன்று
அவளுக்கு மணநாள்
எனக்கோ
அன்று மரண நாள்

அங்கே
அவள் திருமணத்திற்கு
மேடை அலங்காரம்
நடந்தது

இங்கே என் பிணத்திற்கு
பாடை அலங்காரம்
நடந்தது

அங்கே
அவள் மீதும்
பூக்கள் தூவினார்கள்

இங்கே
என்மீதும்
பூக்கள் தூவினார்கள்

அவள்
கழுத்திலும் மாலை
ஏறியது

என் கழுத்திலும்
மாலை ஏறியது

இருவருமே
பல்லக்கில் ஏறினோம்

இருவருக்குமே
ஊர்வலம் நடந்தது

அவளுக்கு வீட்டை நோக்கி
எனக்கோ காட்டை நோக்கி

அவளுக்கு
வரிசை வைத்தார்கள்
என்மீது கட்டைகளை
வரிசையாய் வைத்தார்கள்

அவள் விளக்கேற்றினாள்
நான் விளக்காய் எரிந்துகொண்டிருந்தேன்

அவள்
கூரை அடைந்தாள்
நான் இடுகாட்டின்
கூரையை புகையாய்
அடைந்துகொண்டிருந்தேன்

அவள்
ஆணை அடைந்தாள்
நானோ வானை அடைந்தேன்

அவள் சாம்பல் தின்றாள்
நான் சாம்பலாகி நின்றேன்

அவள் திரைப்படம் சென்றாள்
நான் புகைப்படத்தில் நின்றேன்

என் இறுதி ஊர்வலத்தில்
ரோஜாக்களைத் தூவாதீர்
அவள்
வந்தாலும் வருவாள்
முட்கள் அவள் பாதங்களை
முத்தமிடப்போகின்றது

என் உடலை
நீரால் கழுவாதீர்
அவளின் ஒரு துளி
கண்ணீரால் கழுவுங்கள்

எப்போதாவது என்
பாவங்கள் நீங்கட்டும்

காதலியே
மறு பிறவியிலாவது
என்னைக் காதலியே

எழுதியவர் : புதுவைக் குமார் (22-Jul-19, 10:48 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 55

மேலே