காதல் வாழ

உன் கோபத்தை கொஞ்சம்
தந்துபோ
சுட்டெரித்து விடுகிறேன் இந்த
சுயநலக்கூட்டத்தை
நிராயுதபாணியாய் நிற்கும் என்
உணர்வுகளை
உதாசீனப் படுத்தும் உறவுகளை
அதற்கு
தூபம்போடும் சில தரகுகளை
கௌரவம் என்னும் நாடகமாடும்
கபடங்களை
சுட்டெரிக்க உன் கோபத்தைக்
கொஞ்சம்
தந்துப்போ காதல் வாழ
கதிரவனே