மகளுக்கு ஒரு மடல்

கவிதைமணி =நன்றி
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு
°° மகளுக்கு ஒரு மடல் °°
~~~

அருகாமையில் வைத்து பார்க்கும்
அதேஷ்டம் இல்லையடி தங்கமே
தூரத்தில் வைத்துனைக் காண
தவிக்கிறோமடி பெண் சிங்கமே
தைப்பிறக்கப் போகுதடி வந்து சேர
வழிப்பிறக்க வில்லையோ உமக்கு

என் தாய் நோய்வாய்ப் பட்டு மரண
பிடியிலிருந்து மீள முடியாத தவிப்பை
காணவொன்னாக் கண்ணீர் வடிக்க
அருகாமையிலெனை அழைத்தெனக்கு
சாவு இல்லையடா யுனக்கு மகளாக
மீண்டும் பிறந்து வருவேனடா என்றாள்

அவ்வண்ணமே பிறந்திட்ட என் தாயே
நீ நலமா நாங்கள் இங்கே நலமடி உன்
கவலையே என்றும் எங்களுக்கு எங்கள்
பத்ரமாத்து தங்கமே விரைந்துவாராயோ
வரவிருக்கும் வழிமேல் விழி வைத்தே
காத்திருக்கும் தாய்த் தந்தை சேர்ந்து
மகளுக்கு எழுதும் ஒரு மடலிது
°°°°°°°°°°

ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (23-Jul-19, 11:25 am)
Tanglish : magalukku oru madal
பார்வை : 50

மேலே