இயற்கையில் எல்லாம் இன்பமயம்

விண்ணில் எங்கோ உயரத்தில்
பறந்துகொண்டிருந்தது ஒரு பருந்து
அதன் பார்வையில் பட்டுவிட்டது
உயரத்தில் பரந்த வானம்பாடி
பருந்தைப்போல் உயர உயர பறக்க
வானம்பாடிக்கும் ஆசை ………
தான் மட்டுமே உயரத்தில் ஆதிக்கம் செலுத்த
பருந்து எண்ணியதோ…?
வானம்பாடியைத் துரத்தி துரத்தி
பறக்கவிடடாமல் செய்தது பருந்து
இப்படி செய்துகொண்டே அதன் பார்வை
கீழே, மண்ணில் எங்கேயோ ஓர் மூலையில்
கோழி குஞ்சுகள் தாயுடன் ஓடிக்கொண்டிருக்க
அதில் ஓர் குஞ்சை ஒரு 'ஜெட்' வேகத்தில் வந்து
கவ்விக்கொண்டு ஒரு மரத்தைத் தேடி போனது'!


ஆற்றங்கரையில் ஓடும் நீரில் நீந்தி வந்த
கொக்கு இப்போது ஒற்றைக் காலில் நின்று
தான் தேடிய மீனுக்கு தவமிருக்கிறது

கரையோர இலுப்ப மரத்தில் வந்தமர்ந்த
மரம்கொத்தி ஒரு விறகுவெட்டிபோல்
மரத்தைக் கொத்தி கொத்தி இறை தேடி நிற்க

அங்கொர்க் கோவைக் கொடியில் ஒரு
பச்சோந்தியைத் தேடி வந்ததோர் காக்கை
கொடியின் நிறத்தில் தன்னை மாற்றிக்கொண்டது
பச்சோந்தி! புரியாது காக்கை ஏமாந்து
பறந்து போனது !

இப்படியே ஒவ்வொன்றாய் இயற்கையின்
அழகில் என் மனம் ரசித்து ஐக்கியமாக

நான் நடந்த பாதையில் , இப்போது பகல்
உச்சி வேளையில், எங்கிருந்தோ வந்து
சேர்ந்தன இரணடு நாகங்கள்…..
படம்விரித்து ஆடிக்கொண்டே நான்
பார்த்துக்கொண்டே இருக்கையில்
ஒன்றோடு ஒன்று இணைந்து காதல்
களியாட்டத்தில்…..அது பார்த்து அசந்து நான்..
யாரோ எப்போது சொன்னது ஞாபகத்தில் வர
என்னிடமிருந்த 'கர்ச்சீப்பை' andha பாம்புகள்
விளையாடி சென்ற இடத்தில் வீசி
பின் எடுத்து பத்திரமாய் வைத்துக்கொண்டேன்
அது வாழ்வில் வளம் தரும் என்று யாரோ
சொன்னது கேட்டு

இயற்கையைக் காண்போம் ரசிப்போம்
இன்புறுவோம் உளம் மகிழ
இயற்கையில் எல்லாம் இன்ப மயம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (25-Jul-19, 10:37 am)
பார்வை : 933

மேலே