நட்பே நலமா

விழித்தேடலின் விடையாய்
இமைகளுக்குள் நிறைந்தாய்
கரைந்தோடும் வண்ணமாய்
மனதினில் உறைந்தாய்

காலங்கள் கடந்தும்
சுகமான சுமையாய்
என்று முன்நினைவுகள்
நெஞ்சை நிறைக்கும்

கண்காணா தேசத்தில்
எங்கிருந்தாலும் நலமாய்
இன்முகம் கோணாமல்
இனிதே வாழ்க!

எழுதியவர் : அருண்மொழி (4-Aug-19, 7:15 pm)
Tanglish : natpe nalamaa
பார்வை : 654

மேலே