கண்ணன் மணிவண்ணன்

கண்ணா கார்மேகத்தில் உந்தன் சியாமல
ரூபம் கண்டேன், தடாகத்து கமல மொட்டுக்களில்
தாய் யசோதை மடியில் ஆடி விளையாடியப்பின்
அயர்ந்து தூங்கும் உந்தன் அழகு கண்கள் கண்டேன்
விடிந்ததும் தடாக மொட்டுக்கள் வளர்ந்து விரிந்திட
அதில் சிரிக்கும் உந்தன் மோகன விழிகள் கண்டேன்
அதில் உந்தன் காந்தப் பார்வையும் கண்டேன்
கானகத்தில் மூங்கில் கண்டேன் அதைத் தென்றல் வருட
வந்த இசையில் உந்தன் வேய்ங்குழல் கீதம் கேட்டேன்
சோலைக்குயில் கீதத்தில் ராதையின் கோவிந்த கீதம் கேட்டேன்
ஓடையின் ஸல் ஸல் ஓசையிலே கண்ணா , உந்தன்
கால் கழல்களின் ஓசைக்கு கேட்டேன்
பார்க்கும் பொருளிலெல்லாம் நீயே கண்ணா
கேட்கும் நாள் ஓசையில் எல்லாம் நீயே கண்ணா
என்னுள் இயங்கும் உயிர்க்கும் உயிர் நீதான் கண்ணா
இதை இன்று நான் புரிந்துகொண்டேன் கண்ணா, கண்ணா
என் மணிவண்ணா நீ இன்றி நான் இல்லையே வேறு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Aug-19, 3:48 pm)
பார்வை : 57

மேலே