சுதந்திரம் , சுதந்திரம் தினம் கவிதை

இனிய சுதந்திர தினம் வாழ்த்துக்கள் 🇮🇳

சுதந்திரம்🇮🇳

அஹிம்சையின் வெற்றி
சுதந்திரம்.
கத்தியின்றி, யுத்தமின்றி போராடியதின் வெற்றி சுதந்திரம்.
மனோபலத்தின் முழு வெற்றி சுதந்திரம்.
பல வருடங்கள் பல தியாகிகளின் தியாகத்தின் வெற்றி சுதந்திரம்.
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க
ரத்தம் சிந்தி, அடிபட்டு
உதைபட்டு, பல கொடுமைகளுக்கு ஆட்பட்டு
பலர் சுவாசம் இழுத்து பெற்ற பொக்கிஷம்
நம் பாரத நாட்டின் சுதந்திரம்.

சுத்த வீரன் நேத்தாஜி கண்ட
கனவு சுதந்திரம்.
செக்கிழுத்த செம்மல்
சிதம்பரனார் கனவு சுதந்திரம்
பாரதி கண்ட கனவு சுதந்திரம்
கொடி காத்த குமரன் கண்ட கனவு சுதந்திரம் .

காந்தி மகான் கூட்டணியின் அனைவருடைய
ஆத்மபலத்தின் மாபெரும் வெற்றி சுதந்திரம்.

தனிமனித ஒழுக்கம் பேனி காப்போம்
'நான்' என்ற மனோபாவம் தவிர்போம்
'நாம்' என்ற எண்ணத்தை எங்கும் விதைப்போம்.
இந்தியாவை உயிராக நேசிப்போம்.
இந்தியனாக இறுமாப்பு கொள்வோம்.
பாரதத்தின் பெருமையை பாரெங்கும் பரப்புவோம்.
வாழ்க பாரதம்!
வளர்க நம் நாட்டின் புகழ்.

- பாலு.

எழுதியவர் : பாலு (14-Aug-19, 2:54 pm)
சேர்த்தது : balu
பார்வை : 115

மேலே