வெளிநாட்டு மாப்பிள்ளை

உயிரோடு உயிரானாய்
உள்ளமதில் நிலையானாய்
துயிலோடு கனவானாய்
துணைவன் என்று துணையானாய்

கரம் கோர்த்தேன் கனவுகளோடு கவிதை சொன்னாய் காதல் கொண்டேன்
காலம் மெல்ல கடந்ததுவே

கணவன் என்று நினைத்திருந்தேன்
நீ காமுகன் என்று அறியவில்லை
ஊரார் சொன்னார்கள் உன் குணமெல்லாம்
உண்மையறியா பேதை
உத்தமர் நீயென்றுரைத்தாள்

பட்ட பின்தான் அறிந்தாள்
பட்டணத்தில் உள்ள மனைவியை
பணம் வேண்டும் என்று பாரினுக்கு போனாய்
போன இடமெல்லாம் பொம்பளைக்கா பஞ்சம்

காதல் கொண்ட மனைவி
காத்திருந்த காலம்
நோயாகிப் போனாள்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேதனையாய் தந்தார் வாழ்வை
புரிந்து கொண்டாள் பேதை
போதும் இந்த பொய்காரர் வாழ்க்கை
புறபடுறாள் பாரு புது யுகத்தை தேடி

எழுதியவர் : அஸ்லா அலி (21-Aug-19, 1:13 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
பார்வை : 126

மேலே