அரசியல்

அறம் இல்லா இயல்
அருமை குலைக்கும் அனல்
அறிவானோர் பொருளீட்டும் வயல்
அறிவற்றோர் சிக்கும் புனல்

குடித்து மகிழ்வோர் களம்
குடிகெடுப்போர் கூடம்
குறுகிய எண்ணத்தோரின் கும்பம்
குருதிக்கு அஞ்சாதோர் குலம்

பொய்யுரைப்போர் பொதுவிடம்
பொது மகளிரினும் கீழிடம்
பொறையுடையருக்கு பொருந்துமிடம்
பொதுவாய் நோக்கின் பெருந்தவறு பிறப்பிடம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Aug-19, 7:26 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1194

மேலே