பெண்
பூவின் தன்மை அதன் மென்மையில்
பூவின் அழகே அதன் நறுமணத்தில்
மனதை மயக்கும் மென்மையான மணத்தில்
பெண்ணின் தன்மையே அவள் மென்மையில்
ம்ரிதுலா அல்லவோ அவள் அதனால்;
பூப்போல் பெண்ணிற்கும் மணமுண்டு,
நித்தியம் கூந்தலில் மலரின் வாசம்.
அவள் கூந்தலுக்கு மணம் தந்ததோ….
பெண்ணின் சிரிப்பு புன் சிரிப்பு
அதன் ஓசை காதலன் கண்ணிற்குத்தான் தெரியும்
காதிற்கு கேட்க அல்ல அதனால்
முனிவரையும் மயக்கும் மருந்தல்லவோ அது
பெண்ணின் முகம் தங்க நிலா
ஆம் மஞ்சள் பூசிய இவள் முகம்
நிலவின் ஒளியாய் மஞ்சள் நிறம்
வீசியதோ….
பெண்ணின் பேச்சு அமுதம் எம்மொழியில் அவள் பேசினாலும்
சந்திரனின் குளிர் கொண்டது
அதிர வைக்கா கனிமொழி அது
பெண்ணே நீ என்றும் பெண்ணாய் மட்டுமே
இருந்துவிடு அதுதான் உனக்கு
தனியழகு
ஆண் உன்னை என்றும் பித்தாய்
உன்னை நாடி உன் நினைவில் வாழ