ரோசாப்பூ

காலையில் என்முன்னே அந்த அழகிய
சிவப்பு ரோசா மலர் காட்சி தந்தது
உருண்டு திரண்ட மொட்டு விரிய
சிரித்தது இதழ்கள் விரிந்து ரோசா …..
என்னுள்ளம் குளிர இன்பம் சேர்த்து
மாலையில் பார்த்தேன் அதிர்ந்தேன் நான்
அங்கு அழகு சிவப்பு ரோசா….. வெறும்
செடியின் உலர்ந்த காம்பாய் காட்சி தந்தது
பூத்து குலுங்கி சிரித்து என் மனதை ஆட்கொண்ட
சிவப்பு இதழ்கள் வாடி மண்ணில் கிடக்க
வாடியது அதைக் கண்டு என் மனமும்

அதோ அவள் நேற்று மணமாகி
மணக்கோணத்தில் சிரித்து காட்சி தந்தாள்
அந்த சிவப்பு ரோசாவைப்போல்
இன்று …… ஐயகோ எப்படிச்சொல்வேன் அதை
சிறகொடிந்த பறவைபோல் , இதழ்கள்
சிந்திய ரோசாப்பூவைப் போல்
உருவமே சிதைந்ததுபோல் காட்சி தந்தாள்
'சீதனத்தில், தகராறு , மணாளன் அவளை
விட்டுவிட்டு பெற்றோர் பரிவாரத்துடன்
சென்றுவிட்டான் தன் வீடு ….
இனி இவள் செல்வாள் எவ்வீடு …..
யார் சொல்வார் இதற்கு பதில்..?

கருகியது ரோசாப்பூ…..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Aug-19, 11:26 am)
Tanglish : rosaappoo
பார்வை : 73

மேலே