பூமகள்
பூவிற்கு இதழ்
வாசம் வீச
பூவைக்கு இதழ்
நேசம் பேச
பூவிற்கு மணம்
பூவைக்கு மனம்
தேவை முடிந்ததும
இருவரும்
கசக்கி எறியப்படுவர்
வாடுதல்
இருவரின் விதி
தவறாக கையாலும்போது
ரோஜா முள்ளால் குத்துகிறது
இவள் சொல்லால் குத்துகிறாள்
உமன் செல்லால் குத்துகிறாள்
அதில் மகரந்தம் இருக்கும்
அவள் யாருக்காவது
மகளாக இருப்பாள்
பூவை தேனி சுற்றும்
பூவையை ஆண் ஈ சுற்றும்
பூ முற்றினால்
பிஞ்சு விடும்
பூவையை முட்டினால்
செருப்பு பிஞ்சுவிடும்
பூ இருப்பது சோலை
பூவையோ நான் மட்டும் நடக்கும்சாலை
தார் போட்ட சாலை அல்ல
சுடி தார் போட்ட சாலை