நீல நைலில் நீந்துகின்ற கயல்கள்
முத்துக்கள் விளையுமிடம் நீலக்கடலானாலும் அவை
வித்தைகள் புரிவது உன் செவ்விதழ் புன்னகையில்தான் !
சித்திரை நிலவு வானில் எத்தனை அழகாய் வளர்ந்தாலும்
சத்தியமாய் முழுநிலவாவது உன்னெழில் முகத்தில்தான் !
நீலநைலில் நீந்துகின்ற கயல்கள் எல்லாம் எழில்
கிளியோபாத்திரவை காண்பது உன் நீலவிழிகளில்தான் !
புத்தம் புதிதாய் புத்தகம் எத்தனை படித்தாலும்
நித்தம் நான் விரும்பிப் படிப்பது உன் பூவிழி புன்னகை நாவல்தான் !