அவள்

அவள் விழி கயல் விழியா
கயல் விழி இவள் விழியா
அவள் முகம் தாமரை
தாமரை இவள் முகமா
ஆஹா என்ன நடை என்ன நடை
அவள் நடை அன்ன நடை
அன்ன நடை இவள் நடையா
குங்குமப்பூவா இவள் கன்னம்
இவள் கன்னம் குங்குமப்பூவா

இப்படி காணும் இயற்கையில்
எல்லாம் என்னவள் இனிய அங்கங்கள்
ஒன்றாய் கலந்திட இயற்கையாய்
அவளை காண்கின்றேன் நான்
ஒட்டுறவாட தொட்ட சுகம் காண

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Sep-19, 3:55 pm)
Tanglish : aval
பார்வை : 112

மேலே