வரி

****
நில வரி
வீட்டு வரி
வாகன வரி
குப்பை வரி
மின்சார வரி
தண்ணீர் வரி
லஞ்ச வரி
ஊழல் வரி
பொய்வரி
பித்தலாட்ட வரி
பாதுகாப்பு வரி
அந்த வரி இந்த வரி என
வாழ்க்கை முழுவதும்
வருமானம் இல்லாத போதும்
வரி செலுத்தி செலுத்தி
ஓயும்போதும்
வரி வரியாகவே இருக்கிறது
வாழத் தகுதியற்ற தேசத்தில்
வாழ்ந்து சலித்த மனிதனின்
மேனிக்கு வெளியே தெரியும்
எலும்புக்கூடு.
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ். (3-Sep-19, 4:09 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vari
பார்வை : 104

மேலே