பரம்பரை வழித்தேன்றிய கலைஞர்கள் வரிசையில் கணேசலிங்கமும்

பரம்பரை வழித்தேன்றிய கலைஞர்கள் வரிசையில் கணேசலிங்கமும் இணைந்து கொள்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வீரம் விளைபூமியில் முள்ளியவளை கிராமத்தில் கதிரித்தம்பி வழித்தோன்றலில் வந்துதித்த நல்லையா கணேசலிங்கம் (கணேஸ்) 26.03.1959 ஆண்டு நல்லையா தங்கம்மா இணையரின் மூன்றாவது மகனாக பிறந்தார்.

வீரத்தின் சிகரமா காணப்படும் குடும்பம் நான்கு ஆண்பிள்ளைகளையும் இரண்டு பெண்பிள்ளைகளையும் கொண்ட குடும்பமாக நல்லையா தம்பிதிகள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள்.

அதில் கணேசலிங்கம் (கணேஸ்) துடுப்பாட்டத்துடன் வளர்ந்து வந்தான்.
சிறுவதியில் ஆரம்ப படிப்பினை முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திலும் பின்னர் வித்தியானந்தா கல்லூரியிலும் தன் படிப்பினை தொடர்ந்தான்.
படிக்கும் போது விளையாட்டில் மிகவும்திறமையான ஒருவிரனாக பாடசாலைக்கும் மண்ணுக்கும் பெருமைசேர்ந்த்துக்கொடுத்தான்.

பாடசாலைப்பருவத்தில் வலைப்பந்தாட்டம்,உதைபந்தாட்டங்களில் சிறந்த வீரனாக திகழ்ந்த கணேஸ் பல போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தான்
இவ்வாறு விளையாட்டில் வீரனாக திகழ்ந்து குடும்ப பந்தத்தில் இணைந்து நல்ல கலைகுணம் கொண்ட பிள்ளைகளை பெற்றெடுத்தான் தந்தையின் வழியில் பிள்ளைகள் இன்றும் கலையினை பதித்து நிக்கின்றார்கள்.

1995 தொடக்கம் மக்கள் விடுதலைக்காக கலைப்பயணத்தில் அயராது உழைத்த பெருமை கணேசினை சாரும்,அன்று தொடக்கம் கோவலன் கண்ணகி சரித்திர நடாகத்தில் இவனது தந்தை நல்லையா தட்டான் என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்து சிறந்த விருதினை பெற்றரோ அதேபோல் மகனும் கணேசும் அந்த பாத்திரத்தில் சிறப்பு தேர்ச்சியடைந்து பல நூற்றுக்கணக்கான மேடைகளில் ஏறி தனது நடடிப்பின் பெருமையினை பறைசாற்றி பல பெரியவர்களின் பாராட்டினை பெற்றான்,

மாவீரன் பண்டாரவன்னியனின்ன வரலாற்று சரித்திர நாடகத்தில் காக்கைவன்னியனாக கணேஸ் பாத்திரம் ஏற்று நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தான் என்.எஸ். மணியம் அவர்களின் நெறியாள்கையில் உருவாகும் வரலாற்று நாடகங்களில் காக்கை வன்னியன் என்றால் கணேசின் நடிப்பு திறமை இன்றும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளது.

கடும்பசுமை ஒருபக்கம் இருந்தாலும் கலையினை வளர்க்கவேண்டும் என்ற துடிப்பம்,கலையில் உள்ள நுணுக்கங்களை அரங்குகளில் வெளிக்கொணரும் நடிகர்களில் கணேசும் ஒருவராக திகழ்ந்த காலகட்டங்களிலர் 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது சிறந்த நடிகனாக கணேஸ் போரின்போது ஒருகாலினை இழந்தான்

அதன்பின்னரும் நடித்து காட்டவேண்டும் தனது நடிப்பின் திறமை உள்ளது என்பதை நிரூபித்து காட்டிய இவன் தனது பிள்ளைகளை கலையில் வளர்த்தெடுக்க காட்டிய அக்கறையின் வெளிப்பாடாக இன்று கணேசின் பிள்ளைகள் நடிகர்களாக வளர்ந்து நிக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட கணேஸ் தனது இறதிக்காலத்தில் உடல்நலத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தான் இறந்தாலும் தான் பெற்ற கௌரவமான பொன்னாடையினை தன்னுடன் போர்த்துவிடுமாறு வேட்டி இறுதியில் உயிரிழந்தான் இந்த மண்ணிற்கு பெருமை சேர்த்தான். 13.01.2019 அன்று இந்த மண்ணினை விட்டு பிரிந்தான்.

சிறந்த கலைஞன் கணேசனுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு என்.எஸ். மணியம் அவர்களின் வாழ்த்து மடல் ஒன்றில் ...
நல்ல தமிழ் நாடகங்களi நம் மண்ணுக்குஅளித்த முல்லை கலைத்தாய் நாடகமன்ற சனசமூக நிலையத்தின் மூத்த கலைஞன் சமூகசரித்திர நாட்டுக்கூத்துக்களில் வல்லமை மிக்கவன்,காக்கைவன்னியனாக,பொற்கொல்லனாக,ஜக்கடைச்சண்டியனாக, பல்துறைகளில் முத்திரை பதித்தவன்,கலைவளச்சிக்காக ஜம்பதிற்கு மேற்பட்ட மேடை நாடகங்களில் திறமையினை வென்று காட்டியவன்,என்று குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைஞர்களுக்கான சரியான சந்தர்பங்கள் கிடைக்காத நிலை இன்றும் தொடர்ந்தாலும் எங்கள் கலைஞர்களை நாங்களே மதிப்பளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளளோம்.

பல கலைஞர்களிடம் கலையின் நுணுக்கங்கள் காணப்பட்டாலும் அவர்களுக்கான சந்தர்பங்கள் சரியாக கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை ஒன்று குடும்பபொருளாதார நிலமை இவை இனிவரும் காலங்களில் மாறவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கலைஞனின் அவாவாக காணப்படுகின்றது கலையினை வளர்த்த மண் கலை வளர்ந்த மண் இந்த முல்லைமண் இந்த மண்ணில் உள்ள ஒவ்பொரு கலைஞர்களையும் இனம் கண்டு அவர்களின் பொருளாதாரத்தினை வளப்படுத்திக்கொள்வதன் ஊடகா கலையினை வளர்த்து மண்ணின் பெருமையினை பறைசாற்றி நிக்கவேண்டும் என வேண்டுகின்றோம்.

எழுதியவர் : Anthanan (5-Sep-19, 8:30 pm)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 194

மேலே