உறுப்பினர் சேர்ப்பு

அண்ணே நாம புதுசா கட்சி தொடங்கறோம். கட்சிக்கு நிறைய உறுப்பினர்களைச் சேர்க்கணும். அதுக்கு என்ன செய்யலாம்?
@###@@@@@
அட தம்பி, நாம தகாத வழிகளில் சம்பாதிச்ச பணம் கோடிக்கணக்கில நம்மகிட்ட கெடக்குது. நாம ஒவ்வொரு வட்டாரத்திலயும் 'ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்னு விளம்பரம் செய்யணும். தேதி, நேரம் எல்லாம் அறிவிச்சிடணும். ஒரு வட்டாரத்தில தம்பதிகளா வரும்
ஆயிரம் பேருக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கப்படும்னு தெரிவிக்கணும். குறிப்பிட்ட தேதில அந்தந்த ஊர்கள ஒரு அரிசி மொத்த வியாபாரிகிட்ட அரிசிய எம் படம் போட்ட பையில அஞ்சு கிலோ வீதம் ஆயிரம் பையைத்தர ஏற்பாடு செய்யணும்.
தம்பதிகளா ஆயிரம் பேருன்னா நம்ம கணக்குப்படி ஆயிரம் பெண்களும் ஆயிரம் ஆண்களும் வருவாங்க. அப்ப வர்றவங்கிட்ட நம்ம கட்சியோட உறுப்பினர் அட்டைகளைக் குடுத்து பூர்த்தி செய்து கையெழுத்து வாங்கிடணும். பெண்களுக்கு அரிசிப் பை. அவுங்க கணவன்மார்களுக்கு தலா நூறு ரூபாய் தரப்போறாம். வட்டாரத்துக்கு ரண்டாயிரம் உறுப்பினர்கள். ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக அஞ்சு லட்சம் உறுப்பினர்கள். மாநிலம் முழுவதும் கொறஞ்சபட்சம் ஒண்ணரை கோடி உறுப்பினர்கள்.
@@@@@@@
அண்ணே இதுக்கெல்லாம் பல கோடி செலவாகுமே. இது சரிப்படுமா?
@@@@@@@
இது செலவு இல்லடா தம்பி. தேர்தல் நேரத்து வரவு.
@@@@@
என்ன அண்ணே சொல்லற?
@@@@@@@
ஒவ்வொரு தொகுதிலயும் நம்ம கட்சி ஆள நிறுத்தணும். நம்ம கட்சில ஒண்ணரைக் கோடி உறுப்பினர்கள் இருக்கிறாங்கன்னு தொடர்ந்து விளம்பரம் செய்யணும். தேர்தல் சமயத்தில பணக்கார கட்சிங்க பயந்து அலறிட்டு நம்மகிட்ட ஓடிவருவாங்க. நம்ம வேட்பாளர்கள வாபஸ் வாங்கச் சொல்லிப் பேரம் பேசுவாங்க.எந்தக் கட்சி நம்மள நல்லா கவனிக்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவா நம்ம வேட்பாளர்கள் வாபஸ் வாங்குவதாக அறிவிச்சிடணும். ஆட்சிக்கு வராமலே சம்பாதிக்கிற வழி இதுதான்டா தம்பி. இல்லன்னா கூட்டணி பேரத்திலயும் சுருட்டலாம்.
@##@@@@@
அண்ணே உங்க ராஜதந்திரம் யாருக்கும் வராதண்ணே.
@@@@@@
எல்லாத்துக்கும் முன்னோடிகள் இருப்பாங்கடா.
◆■■■■■■■■◆●●◆■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆
இத்தகைய அரசியல் சட்டப்படி குற்றம்.

எழுதியவர் : மலர் (9-Sep-19, 8:55 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : urippinar serappu
பார்வை : 137

மேலே