காதலி

நெடுஞ்சாலையில் விழும் தூறல்போல்
உன்னில் நான் கரைந்தேனோ..
அதிகாலையின் இருள் மாய்வதாய்
உன்நெஞ்சில் நான் தொலைந்தேனோ..
மழைத்துளி உடைத்து ஒளி சிதறினால்
வானவில் தோன்றுமடி
ஒரு காதல் உடைத்து நான் சிதறினால்
முழுவதும் நீ.. பாரடி
மணவறை நிறைந்து மணம் தெளித்திருக்கும்
மலரும் நீதானடி
தெருவினில் உதிர்ந்து புழுதியில் சிதைந்த
மகரந்தம் ஆனேனடி..
நீ தந்த காதலில் நீ செய்த வலிகளை
மறந்திட பாடுகிறேன்..
உயிருக்குள் வைத்துனை பூஜித்ததாலே
உயிர் விட நாடுகிறேன்..

எழுதியவர் : M.Rafiq (10-Sep-19, 6:59 pm)
சேர்த்தது : முகமது ரபீக்
Tanglish : kathali
பார்வை : 304

மேலே