இணைந்துவாழ் இயற்கையோடு

இன்பம் என்றும் இனிதாய்த் தருவாள்
இயற்கை என்னும் இளைய ராணி,
துன்பம் தராத தூயவள் இவளே
துணையாய்க் கொள்ளத் துணிந்திடு நீயே..

இவளுடன் என்றும் இணைந்தே வாழ்ந்திடு
இவள்தன் உறவே ஈடிலாத் துணையே,
தவறியும் இவளைத் தாக்கிட வேண்டாம்
தானே அழிந்திடும் தரணியில் வாழ்வே..

மண்ணில் இவள்தான் மதிப்புடை அரசி
மனதில் கொண்டே மதித்து நடப்பாய்,
பண்ணாய் இசைப்பாள் பழகிடில் நட்பாய்
பார்த்துச் செயல்படு பாராய் உயர்வே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Sep-19, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 47

புதிய படைப்புகள்

மேலே