காதலில்

காத்திருத்தல் இல்லை காதலில் கண்டதும் வந்தது
அதன் பின்
காத்திருத்தலும் காதலுக்கு ஒரு வேலையானது
ஒவ்வொரு நொடியும்
காணவேண்டி காத்திருந்ததில் நேசம்
புரிந்தது
வந்த காதல்
காத்திருக்கவிடவில்லை பலதை கற்றுத்
தந்தது
சிலது மட்டும்
புரிந்தும் புரியாததுமாய் குழப்பமாய்
இருந்தது
ஒன்று மட்டும்
தெளிவானது இதுதான் காதல்
என்பது
தெளிந்ததால் தானோ
காத்திருக்கவில்லை காதல் வந்த
வேகம் கூடியது
திரும்பிச் செல்கையில்
மறப்பது என்பதை மட்டும் சொல்லித்தராது சென்றது