சிரிப்பை

உன் சிரிப்பை கொஞ்சம்

சுருக்குப் பைய்யில் போட்டு
இறுக்கி வை

உயிர் பிழைக்கட்டும் சில உதவாக்கரைகள்

மெத்தென தடவி சொத்தென
தள்ளிவிடும்

அந்த சிரிப்பை அள்ளிமுடி முந்தானையில்

சில மூடர்கள் முடமாகாது
இருக்கட்டும்

நோய்க்கு மருந்து நோகாத
விருந்தாகும்

உன் சிரிப்பை சிக்கனம்
பன்னு

தலைக்கனம் பிடித்தவர்கள்
தலை காணாது

போவது தவிர்கட்டும்

எழுதியவர் : நா.சேகர் (12-Sep-19, 6:48 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : chirippai
பார்வை : 139

மேலே