அழகோ அழகு
கண்ணசைவில் கயல் மீன்கள் நீந்தி விளையாடும்
புன்னகையில் ரோஜா மலர்கள் மலர்ந்து விரியும்
வண்ணமுகக் கருங்கூந்தல் காற்றாலே கலையும்
வெண்ணிலாவை கரு மேகம் மூடி மறைக்கும்
சின்ன அசைவில் சிற்றிடை தட்டுத் தடுமாறும்
கன்னக் குழியில் கால்தடுக்கி என்னிதயம் வீழும்
அஷ்றப் அலி