தந்தை பெரியார்

மத வெறி குருடர்களை
விழிக்கவைத்த விடியலே
மனித நேயம் - காத்திடத்தான்
பிறந்து வந்த புதையலே
காதர்பாய் சட்டையையும்
கந்தசாமி அணியலாம் என்றுரைத்தாய்
உன் கருப்பு சட்டை வரைபடத்தில் சாதியெனும் எல்லை
இல்லை என்பதை எனக்கு புரியவைத்தாய்

சீர்கெட்டு போன சமூகத்தை - நீ
நேர் கோட்டால் வரைந்தெடுத்தாய்
பகுத்தறிவு பகலவனாய் - நீ
இருட்டிலும் உதித்திருந்தாய்
சாதிகளை இறக்க வைத்தாய் - மனித இனம்
என்ற சாதிகளை பிழைக்க வைத்தாய்

பெண் இனத்தினை
பொன் இனமாய் ஜொலிக்க வைத்தாய்
ஏற்றத்தாழ்வை ஏற்று பார்க்காத
எட்டா உயரம்தான் நீ
அல்லும் பகலும் யாவருக்கும் - சமமே
என்பதை எடுத்துரைத்த சுடரொளியே
உன் வெள்ளைத்தாடி சாட்டையால் மூடர்களின் முதுவினை
கிழித்தெடுத்த வீர கிழவனே


மடமையை உடைத்து மதங்களை கிழித்து
தீண்டாமை புரட்டி போட்டு "தீ" என்பது ஒரே ஜோதிதான் என்று
எனக்குள் மனித நேயத்தை எரியவைத்தாய்

இன்று உன்னால் இங்கு
எல்லோரும் சமமே

BY ABCK

எழுதியவர் : (17-Sep-19, 8:41 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : thanthai periyaar
பார்வை : 35

மேலே