உலக அழகி

அவள்
மயிலிறகை
புத்தகத்தில் மறைத்து
வைத்தாள் குட்டி
போடும் என்று

மறுநாள் அவளுக்கு
அழகிய பெண் குழந்தை
பிறந்தது

இவள்
உலக அழகிப் போட்டியில்
கலந்துகொள்வது அறிந்ததும்
போட்டி நிறுத்தப்பட்டு
போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டாள்

நிச்சயம்
இவளின்
தந்தையின் பெயர்
அழகப்பனாகத்தான்
இருக்க வேண்டும்

இவள் இங்கே தரையில்
இருக்கும்போது
சந்திராயன் எப்படி
நிலவில் தரையிரங்கும்

இஸ்ரோ விஞ்ஞானிகள்
இதை அறிந்தால்
இவள் வீட்டு வாசலில்தான்
நிற்பார்கள் ரோ

நாசா விஞ்ஞானிகள்
அமிழத்தைத் தூவி
செயற்கை மழை
பொழிகிறார்கள்

நம்மூர் விவசாயிகள்
இவள் கைப்பட்டக்
கமலத்தைத் தூவி
இயற்கை மழை
வரவைக்கிறார்கள்

இவளைப் பார்த்த
அனைவரும்
குற்றம் புரிந்து
சிறைக்குச் செல்கின்றனர்
இவள் பார்த்த அந்த
ஒருவன் மட்டும்
பூக்கள் அலங்கரித்த
அறைக்குச் செல்கிறான்

இவள் திமுக அல்ல
தே மு க வின் தலைவி
தேவதைகள் முன்னேற்றக்
கழகம்

துணியில்
இவள் நீக்கியது
கரை
அதில் வந்ததோ பிறை
இவளே இளம் தலைமுறை
இளைஞர்கள் பயணிக்கும்
கப்பலின் கலங்கரை

இவள் கர்பத்திற்குப்
பிறக்காது
ஒரு சிற்பத்திற்குப்
பிறந்தவள்

எழுதியவர் : புதுவை குமார் (22-Sep-19, 3:17 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : ulaga azhagi
பார்வை : 150

மேலே