ரேனுஸ்ரீ-16

ஸ்ரீ அங்கிருந்து செல்ல ஆரம்பித்ததும் நான் அவனை துரத்தி ஓட ஆரம்பித்தேன்,வழியில் இருந்த மக்களை(அனைத்தையும்) கடந்து ஓடிக்கொண்டிருந்தேன் அப்போது எங்கள் இருவரின் மத்தியில் சுமார் 13 மீட்டர் தொலைவு இருந்தது.
நான் துரத்தி ஓட ஆரம்பித்த சில நிமிடங்களில் ஸ்ரீ என்று சத்தமாக அவன் பெயரை கூறி அழைத்தேன் ஆனால் ஸ்ரீயை தவிர என் அருகில் இருந்த அனைவரும் என்னை பார்த்தார்கள்.
ஸ்ரீ தொலைவில் இருந்ததால் நான் அழைத்தது அவனை சென்று அடையவில்லை.
மீண்டும் ஓட ஆரம்பித்தேன்,ஸ்ரீ நடந்து கொண்டிருந்ததாலும் நான் ஓடிக்கொண்டிருந்ததாலும் எங்களுக்கு இடையில் தூரம் குறைந்தது,இன்னும் சிறிது வேகமாக ஓடினாள் ஸ்ரீயை பிடித்துவிடலாம் என்று நினைத்து வேகமாக ஓடினேன்,அப்போது அங்கிருந்த பெரிய கல் தடுக்கி கீழே விழுந்தேன்,விழும்போது எனது இடது உள்ளங்கையும்,முட்டியும் வேகமாக தரையில் சென்று அடித்தது,வலியோடு தடுமாறி என்னை காயப்படுத்திய கல்லை பிடித்தபடி முட்டியிட்டு அமர்தேன்,உயிர் போவது போல் ஓர் வலி மற்றும் எருச்சல், கண்களை இறுக்கி மூடியபடி சில நொடிகள் வலியை அனுபவித்துக்கொண்டிருந்தேன்,அப்போது"எ மா இப்படியா கண்ணு மண்ணு தெரியாம ஓடுவ?"என்றபடி யாரோ ஒரு பெண்மணி என்னை எழுப்ப முயன்றார்.
நான் எழுந்து கண்களை திறந்து அவரை பார்த்தபோது முதலில் மங்கலாக தெரிந்து பின்பு அவருடைய முகம் தெளிவாக தெரிந்தது,இதைய துடிப்பு சிறிது பலமாக இருந்தது,தொண்டை முழுவதுமாக வறண்டு கூர்மையான வழியை கொடுத்தது,பெரு மூச்சோடு அந்த வயதான பெண்மணியை பார்த்துவிட்டு என் காலினை பார்த்தேன்,அடிபட்ட காலின் சுண்டு விறல் மற்றும் பக்கத்து விரலில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது,இடது கையும்,முட்டியும் மண்ணில் உராய்ந்து எரிச்சலுடன் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.
அப்போது ஸ்ரீ நினைவுக்கு வந்தான் பதறி ஸ்ரீ எங்கே என்று அவன் சென்ற திசையை பார்த்தேன்,ஸ்ரீ எங்கும் தென்படவில்லை,மீண்டும் ஓட துடங்கினேன்,முன்னோக்கி சிறிது தூரம் ஓடிய பிறகு அந்த பாதை இரண்டாக பிரிந்தது,முதலில் இடது பக்கம் பார்த்துவிட்டு வலது பக்கம் பார்த்தேன் தூரத்தில் ஸ்ரீ சென்றுகொண்டிருந்தான் எங்களின் இடையில் மீண்டும் தொலைவு அதிகமாக இருந்தது.
மீண்டும் ஓட துடங்கினேன்,ஓடிக்கொண்டிருக்கும் போது ஸ்ரீ ஒரு சிறிய கட்டிடத்திற்குள் நுழைவதை கண்டேன்,அந்த கட்டிடம் பார்ப்பதற்கு ஏதோ அரசு தொடக்கபள்ளி போல இருந்தது,சிறிது தூரம் ஓடிய பிறகு அந்த கட்டிடத்தை அடைந்தேன்,ஸ்ரீ கட்டிடதிற்குள்ளிருந்து வெளியே வந்தது போல தெரியவில்லை,அதனால் ஸ்ரீ எப்படி இருந்தாலும் வெளியே வருவான் அவனை பார்த்துவிடலாம் என்று நினைத்து அவனுக்காக அந்த கட்டிடத்தின் வெளியே காத்திருந்தேன்,அந்த கட்டடிடத்திற்கு வெளியே பெரிய பெரிய (milk cans )இருந்தது,சில நிமிடத்திற்கு பிறகு வாசலின் அருகே சென்று எட்டி பார்த்தேன் அப்போது உள்ளே இருந்து வந்த ஒருவர் என்னை வினோதமாக பார்த்தபடி"என்னமா,என்ன வேணு?"என்று கேட்டார்.
நான் அவரை பார்த்து"இல்ல சார்,எனக்கு தெருஞ்சவரு ஒருத்தர் உள்ள இருக்காரு அவரோட பெரு ஸ்ரீ அவருக்காகத்தா வெயிட் பண்ற"என்றேன்.
அவர் யோசித்தபடி"இல்ல மா,நீ சொல்றமாரி உள்ள யாரு இல்ல"என்றார்.
"இல்லங்க பிங்க் கலர் டீ ஷர்ட் போட்டுட்டு ஒருத்தர் உள்ள வந்தாரு"என்று கர கரத்த குரலோடு தொண்டையை பிடித்தபடி கூறினேன்.
"ஓ,அந்த பையனா!,அவன் போய் அஞ்சு நிமிஸோ மேல இருக்கோ"என்றார்.
"என்ன,இல்ல நா கொஞ்ச நேரமா இங்கதா இருக்க யாரோ வெளிய வந்த மாரி தெரில"என்று பதட்டத்தோடு கூறினேன்.
அவர் புன்னகித்து விட்டு"உள்ள இன்னொரு வாசல் இருக்கு மா,அந்த வழிய போய் இருப்பாரு"என்றார்.
அவர் கூறியதை கேட்ட உடன் அந்த கட்டடிடத்தின் உள்ளே நுழைந்து பார்த்தேன் அவர் கூறியதை போல இன்னொரு வாசல் தென்பட்டது,எனது கெட்ட நேரத்தை நினைத்தபடி நெற்றியில் அடித்துக்கொண்டு அந்த வாசலின் வழியாக வெளியே சென்று பார்த்தேன்.
சுற்றி பார்த்த போது சிறு தூரத்தில் ஸ்ரீ அவனுடைய கைபேசியை பாக்கெட்டில் வைத்துவிட்டு கையில் வைத்திருந்த பையை சைக்கிளில் மாட்டிவிட்டு,அங்கிருந்து கிளம்பினான்.
"ஹே"என்று கத்தியபடி மீண்டும் துரத்தி ஓட ஆரம்பித்தேன்,அவன் சைக்கிளில் செல்ல ஆரம்பித்ததும் மீண்டும் எங்களுக்கு இடையில் தூரம் அதிகரித்தது இருப்பினும் நில்லாமல் ஓடினேன்.
ஸ்ரீ சைக்கிளை ஓட்ட ஆரம்பித்த போது மெதுவாக சென்று கொண்டிருந்தான்,சிறு நேரத்திற்கு/தூரத்திற்கு பிறகு வேகமாக ஓட்ட ஆரம்பித்துவிட்டான் என்னால் அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடமுயவில்லை,எனது கால்கள் தானாக ஓடுவதை நிறுத்தியது,கடுமையாக மூச்சு வாங்கியது,கால்கள் நடுங்க ஆரம்பித்தது மற்றும் பின்னங்கால் சதையில் கடுமையான வழியையும் உணர்தேன்,தலை சுற்றுவது போல இருந்தது,ஸ்ரீ சென்றுகொண்டே இருந்தான்,அவன் தலை மெல்ல என் பார்வையில் இருந்து மறைந்துகொண்டே சென்றது,எனது கண்கள் ஒரு நிமிடம் இருண்டு மீண்டும் தெளிவானது,நான் பார்த்த போது ஸ்ரீ சென்றிருந்தான்,கண் எட்டும் தூரம் வரை ஸ்ரீயை காண முடியவில்லை.
அப்போது தான் நான் எங்கிருக்கிறேன் என்றும் என்னை சுற்றி என்ன இருக்கிறது என்றும் பார்த்தேன்,அது வரையிலும் ஸ்ரீ மட்டுமே என் கண்களுக்கு தெரிந்து கொண்டிருந்தான்,அவனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்பதிலேயே எனது முழு கவனமும் இருந்தது.
என்னை சுற்றி எந்த வீடுகளும்,மனிதர்களும் இல்லை,சுற்றிலும் மரங்களும் விவசாய நிலங்களும் இருந்தது,ஒரு ஒற்றையடி பாதையில் கொளுத்தும் வெயிலில் தனியாக மூச்சு வாங்கியபடி நின்றுகொண்டிருந்தேன்,திடிர்யென மனதில் பயம் தட்டியது,அம்முவை அலைபேசி மூலமாக அழைக்க நினைத்தேன் அப்போது தான் எனக்கு என்னுடைய பணப்பை,அலைபேசி அனைத்தும் அம்முவிடம் இருப்பது நினைவுக்கு வந்தது.
"ஷீட்..,கடவுளே! "என்று நெற்றியில் அடித்துக்கொண்டபடி தவிப்போடு தரையில் அமர்தேன்.
மிக அசதியாக இருந்தது, தூக்கம் இழுத்தது,குடிப்பதற்கு ஒரு துளி நீர் கிடைக்காத என்று மனம் ஏங்கியது,செய்யவது அறியாது
சுத்திமுத்தி பார்த்தபடி எனது இரு கால்களையும் இறுக்கி அணைத்தபடி தலையை சாய்த்து அமர்ந்திருந்தேன்,அப்போது காற்று பலமாக வீசியது,அந்த பலத்த காற்றின் திண்டல் எனக்கு சிறு ஆறுதழையும்,இதத்தையும் கொடுத்தது..

மெல்ல நடந்து சென்றுகொண்டிருந்தேன்,சிறிது தூரம் சென்ற பிறகு ஸ்ரீ சைக்கிளில் அமர்ந்தபடி காத்திருந்தான்,அவனை பார்த்தவுடன் மகிழ்ச்சியோடு அவன் அருகே சென்று நின்றேன்.
அவன் என்னை பார்த்து"எவ்வளவு நேரமா காத்துட்டு இருக்கனு தெரியுமா"என்று கேட்டான்.
"அது..."என்று இழுத்தேன்.
"ஆச்சு விடு,இதோட பின்னாடி வர்றத நிறுத்திக்கோ,உன்ன பாக்கவே பிடிக்கல"என்று கோவமாக கூறினான்.
அவனை குழப்பத்தோடு பார்த்து"என்ன சொல்ற"என்று பதட்டத்தோடு கேட்டேன்.
"எனக்கு எதுவோ தெரியாதுன்னு நெனச்சியா?,நா எல்லாத்தையு பாத்துட்டுதா இருந்த அந்த பைய்ய எ முன்னாடியே உன்ன அவனோட ஆளுன்னு சொல்ற நீயூ அமைதியா இருக்க,உன்ன பாக்கவே பிடிக்கல"என்றான்.
நான் அழுதபடி"சத்தியமா அவனோட பெரு என்னனு கூட எனக்கு தெரியாது,அவன அன்னைக்குதா நா முதல் முறையை பார்த்த,என்ன நம்பு ஸ்ரீ,நீ மட்டுதா எ மனசுல இருக்க"என்று கூறி அழுதேன்.
அவன் என்னை நம்பாதது போல என்னை பார்த்து புன்னஹித்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.
நான் அவனை செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருந்தேன்.
அப்போது என் பின்னால் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது,திரும்பி பார்த்த போது சிறு தொலைவில் ஒரு அழகான குழந்தை என்னை பார்த்து தூக்கி கொள்ளுமாறு கை நீட்டி அழுதது.
நான் அந்த குழந்தையை பார்த்துக்கொண்டிருந்த போது ஸ்ரீ அங்கிருந்து செல்ல முயன்றான்.
மீண்டும் அவனை தடுத்து நான் கூறுவதை கேட்க்குமாறு கெஞ்சினேன்.
குழந்தை வேகமாக அழுதது,என்னால் குழந்தை அழுவதை பார்க்க முடியவில்லை,குழந்தையை சென்று தூக்குவதற்குள் ஸ்ரீ அங்கிருந்து சென்று விடுவானோ என்ற பயம் வேறு,செய்வது அறியாது இருவரின் இடையிலும் மாட்டி தவித்தேன்.
"ஸ்ரீ ஒரு நிமிஸோ இரு ஸ்ரீ நா போய் குழந்தைய எடுத்துட்டு வந்துடுற"என்று அவனிடம் கெஞ்சினேன்.
அவன் சரி என்று தலையை ஆட்டினான்.
"போயிடாத ஸ்ரீ ப்ளீஸ் ஸ்ரீ "என்று கூறியபடி,வேகமாக சென்று குழந்தையை அல்லி அணைத்துக்கொண்டேன்.
திரும்பி பார்த்த போது ஸ்ரீ சென்றிருந்தான்.
"ஸ்ரீ......"என்று கத்தி அழுது கொண்டிருந்தேன்,அப்போது யாரோ என் தோலில் கை வைத்து ரேணு என்று அழைப்பதை கேட்டு திரும்பினேன்.
"உதய்..!"என்று அதிர்ச்சியோடு என் எதிரில் நின்றிருந்த உதையை பார்த்து கூறினேன்.
"என்ன ஆச்சு எ அழகுற!?,உன்ன எங்களா தேடுறது!"என்று பதறினான்.
அவனை குழப்பத்தோடு பார்த்தபடி நின்றேன்.
சரி வா,உங்க அப்பா உன்ன பாக்கனோனு உயிர கைல பிடுச்சுட்டு இருக்காரு"என்றான்.
"அப்பா,அப்பாக்கு என்ன?,அப்பாக்கு என்ன ஆச்சு என்று கதறியபடி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் ஓடினேன்,உள்ளே சென்று பார்த்தபோது என் தந்தை உடல்நிலை சரி இல்லாத நிலையில் மிகவும் சோர்ந்து படுத்திருந்தார்,நான் ஓடி என் தந்தையின் மீது சாய்ந்து கொண்டேன்.
"எங்கடி போன,உன்ன எங்களா தேடி அலையறது?,அந்த பைய்ய பாவோ காலில இருந்து பச்சதண்ணி கூட குடிக்காம உன்ன தேடி சுத்திட்டு இருந்தாரு"என்று மூச்சி விடாமல் திட்டி கொண்டிருந்தார் என் அம்மா.
நான் மிக அமைதியாக அமர்ந்திருந்தேன்.
"எதாவது வாய தொரக்கராளான்னு பாரு,உயிர எடுக்குறதுக்குனே வந்திருக்கடி நீ,என்று கூறி என் தோலை பிடித்து தள்ளினார்.
"ஆண்ட்டி(Aunty )!"என்று கோவமாக கத்தியபடி"உங்களுக்கு அவ இங்க இருக்குறது பிடிக்கலனா சொல்லுக அத விட்டுட்டு இந்த மாரில செய்யாதிங்க,உங்களுக்கு உங்க பொண்ண திட்டனோனா தனியா கூட்டிட்டு போய் திட்டிக்கோங்க,எ முன்னாடி திட்டாதீங்க"என்றான் உதய்.
"ஆச்சு பா,நா ஓ பொண்டாட்டிய எதுவோ சொல்லல போதுமா"என்கிறார் என் அம்மா.
"பொண்டாட்டிய!?.."என்று யோசித்தபடி உதய்யையும்,என் அம்மாவையும் பார்த்தேன்.
உதய்க்கும் எனக்கும் எப்போது திருமணம் ஆனது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்,ஆனால் எவ்வளவு யோசித்தாலும் என் திருமணம் பற்றிய எந்த நினைவும் என் நினைவிற்கு வரவில்லை.
"ஓ மேல உதய் உயிரையே வெச்சு இருக்கா,ஆனா நீ அவன எவ்வளவு கஷ்டப்படுத்த முடியுமோ அவ்வளவு கஷ்ட படுத்துற,போ போய் உதய சாப்பிட கூப்புடு"என்றார் அம்மா.
உதய் வீட்டின் வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான்"உதய் எ காலில இருந்து சாப்பிடாம இருக்கா"என்று கேட்டேன்.
"ஓ கூட சேர்ந்து சாப்படலானு நெனச்ச"என்றான்.
"சாரி"என்றேன்.
"ஹே,சாரி லா வேண்ட,ஆனா ப்ளீஸ் திரும்ப இந்த மாரி செய்யாத,திரும்ப என்ன விட்டுட்டு தொலஞ்சு போகாத,நீ இல்லாம என்னால இருக்க முடில"என்று கூறி கண் கலங்கினான்.
அவன் கூறியதை கேட்டு எனக்கும் அழுகை வந்தது.
நான் அழுவதை பார்த்த உதய் என் கண்களை துடைத்து என் நெற்றியில் முத்தமிட்டான்.
நான் அவனை அன்போடு பார்த்து புன்னகித்தேன்,அப்போது திடீர் என எனக்கு குழந்தையின் நியாபகம் வந்தது"ஐயோ!உதய் குழந்த"என்று பதறியபடி குழந்தை இருந்த இடத்திற்கு சென்று பார்த்தேன்,ஆனால் குழந்தை அங்கு இல்லை,குழந்தையை தேடி அலைந்து கொண்டிருந்தேன் அப்போது ஒரு சரிவான இடத்தின் கீழே ஒரு வாடிய மலர் மாலையை வைத்து குழந்தை விளையாடி கொண்டிருந்தது,ஓடி சென்று குழந்தையை தூக்கினேன்,அங்கு ஒரு மண்ணால் ஆன சமாதி இருந்தது,குழந்தை கையில் இருந்த மலையை வாங்கி அந்த சமாதியின் மீது போட்டுவிட்டு அந்த சமாதியை பார்த்தபடி நின்றிருந்தேன்,அப்போது"ஹே,அறிவு கெட்டவளே மட்ட மதியானோ 3 மணிக்கு குழந்தையோட சுடுகாட்ல என்னடி பண்ற"என்று என்னை பிடித்து கத்திவிட்டு அந்த பள்ளத்தில் இருந்து மேல வருவதற்க்கு உதவினார் என் அம்மா.
"பர்த்டே(birthday ) அதுவுமா உன்ன திட்டிட்ட சாரி என்று கூறி என் நெற்றியில் முத்தமிட்டு ஹாப்பி பர்த்டே (happy birthday )"என்றார் அம்மா.
என் அம்மாவை பார்த்தபடி நம் அம்மா ஏன் பார்ப்பதற்கு அம்முவின் அம்மா போல் தெரிகிறார் என்று யோசித்தபடி கண்களை மூடினேன்,மீண்டும் கண்களை திறந்த போது இரவாகி இருந்தது,காட்டில் நான் மட்டும் தனியாக உலாவி கொண்டிருந்தேன்,அப்போது வானில் தெரிந்த முழு நிலவை ரசித்து விட்டு கீழே பார்த்தேன் அங்கிருந்த நீரிலும் நிலவின் பாரதிபலிப்பு தெரிந்தது,எனது இரண்டு கைகளாலும் நீரை எடுத்து பருகிக்கொண்டிருந்தேன் ஆனால் நீரின் ருசியை உணர முடியவில்லை,தாகம் தீர்ந்த உணர்வும் ஏற்படவில்லை.
அப்போது நீரின் உள் இருந்து ஓர் முதலை வேகமாக வெளி வந்தது,நான் அந்த முதலையின் வாயை என் கால்களால் கத்திகொண்டே உதைத்துக்கொண்டிருந்தேன்,பின்பு அந்த குளத்தை விட்டு மேலே ஏற முயன்ற போது ஒரு ஓநா
(garden wood lizard ) அதன் தலையை தூக்கிய நிலையில் என் மீது தாவ தயாராக இருப்பது போல நின்றிருந்தது,இறுதியாக என் மீது தூவவும் செய்தது.

திடுக்கிட்டு பதறி கண்களை திறந்து சுற்றி பார்த்தேன்,பின்பு ஓர் ஆறுதலான பெருமூச்சுடன் "கனவு"என்று கூறிக்கொண்டேன்,அசதியின் காரணமாக கண்அசந்து விட்டோம் போல என்று யோசித்துக்கொண்டிருந்தேன்,அப்போது எனது செருப்பை ஏதோ மண்ணில் அழுத்துவது போன்றும்,கனமாகவும்,என் கால் விரல்களில் ஏதோ உறுவது போன்றும் இருந்தது.
என் கால்களை சேர்த்து வைத்து கைகளால் அணைத்தபடி அமர்த்திருந்ததால்,என்னால் என் பதத்தை பார்க்க முடியவில்லை,அதனால் அசையாமல் கால்களை கட்டி இருந்த என் கைகளை மெதுவாக விளக்கி பார்த்தேன்.
பார்த்தவுடன்,அதிர்ச்சியில் கண்கள் பெரிதாய் விரிந்தது,கண் இமைக்காது மூச்சை இழுத்து பிடித்தபடி பார்த்தேன்,கனவை விட நிஜம் கொடூரமாக இருந்தது.

தொடரும்...

எழுதியவர் : அனுரஞ்சனி (6-Oct-19, 8:16 pm)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 116

மேலே