பைங்கிளியே பேசுபுள்ள

கத்தாழக் கண்ணு புள்ள /
குத்தாலப் பார்வப் புள்ள/
வெத்தலயப் போட்ட புள்ள /
விவரம் அறியாத புள்ள /
சுத்தலில விடாத புள்ள /

நேத்து வரை நீ சின்னப் புள்ள/
இன்றிருந்து நீ கன்னிப் புள்ள/
மாத்தணும் நான் மால புள்ள/
போர்த்திக்கணும் ஒரு போர்வ புள்ள/

என்னோடு கொம்பு தீட்டாதே புள்ள /
ஆத்தோரம் வம்பு இழுப்பேன் புள்ள /
பெத்த ஆத்தா சொன்னா புள்ள /
நீ என் சொத்தாம் புள்ள /

தாக்கத்தி எடுத்த கை புள்ள /
பூக் கொத்து பறிக்குது புள்ள /
பட்டமிளகாய் போலே முறைக்கும் புள்ள /
கடுகைப் போல் வெடிக்காதே புள்ள/
மவுனம் கலைச்சு என்னிடம் நாலு/ வார்த்தையேனும் பைங்கிளியே
பேசு புள்ள /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (7-Oct-19, 2:22 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 83

மேலே