நண்பனே வா
பறவையாய் சிறகை விரிப்போம்
பறந்து போய் உலகை அறிவோம்
இலட்சியம் இனி தோற்காது
நிச்சயம் தோல்வி இனி நமக்கேது
நிலவை குறிவைப்போம்
வின் மீன் கிட்டலாம்
எழுந்து வா முயற்சி செய்வோம்
இருளை விரட்டி அடிப்போம்
வெளிச்சம் நம் விரலில் எடுப்போம்
புறம் பேசி நம்மை புரண்டுவார்கள்
தாழ்ந்து விடாதே வீழ்ந்து விடாதே
சிலர் நாம் நடக்கும் பாதையை தடுக்கலாம்
சிலர் நம்மை வழிநடத்தும் நேர்மையை முடக்கலாம்
உயரம் தொடவேண்டும் என்றால் உயர்ந்து பார்த்தல் போதாது
உடனே எழுந்து பார்க்க வேண்டும்
நம்பிக்கையை மனதில் வைத்து
இது நமக்கான களம் என்று ஒரு கை பார்த்திடுவோம்
அந்த ஒருகைதான் நாளை
பல நூறு கைகளால் ஓசைதரும்
நிற்காதே நகர்ந்து பழகு
வெற்றி நிச்சயம்
BY ABCK