பிரியாத வரம் வேண்டுமடி 555

என்னுயிரே...


வாழ்வில் பிரியா முடியாத

உறவுகள் ஆயிரம் இருந்தாலும்...


அதில் உயிரான

உறவு நீதானடி...


நிழல்கூட நிஜமாகும் உன்
உறவை
பிரிந்து வாழ்வதுகடினமடி...


உன் வாழ்வில் என்னை
நீ
தூக்கி எரிந்து பேசினாலும்...


உன் ஆடையில் ஒட்டிய

தூசியாக நினைத்தாலும்...


நான் ப்ரியமுடியாத உறவில்

உனக்கே முதன்மையடி...


பிரியாத வரம் வேண்டும்

என் வாழ்வில் உன்னை நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Oct-19, 4:14 pm)
பார்வை : 754

மேலே