உன்பிரிவு

நீராதாரத்தை பெருக்கும்

சிந்தனையை தந்து

நீரின்றி அமையாது உலகு

வரியின் உண்மையை

உணர்த்தியது கோடை

ஆதாரமில்லா அந்தரத்தில்

தடம்புரண்ட சிந்தை

நீயின்றி அழகாகாது வாழ்வு

வரிக்கு உயிர்தந்து

உணர்த்தியது உன்பிரிவு

எழுதியவர் : நா.சேகர் (15-Oct-19, 4:43 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 279

மேலே