தவிற்கமுடியாத
எனக்குள்ளே தான் நீ என்றாலும்
நேரம்போவது தெரிவதில்லை
என்னோடு
நீ இருந்தால்
நேரம் போவதேயில்லை என்னோடு இல்லாது
நீ போனால்
நேரம்போகத நாட்களை நான் விரும்புவதில்லை
வெறுத்து விரட்டும் முயற்சியில்
அது விசுவாசமான நாயாய்
காலைச்சுற்றிவர
விஸ்வரூபம் எடுக்கும் கோபத்தில்
தவிப்பேன்
தவிற்கமுடியாது என்ற உன் சமாதானத்தில்
என்னோடு நீ இருக்கும் நேரம்மட்டும் அதை மறப்பேன்