குழந்தைகளும் நித்திரையும்- பாகம் 1

குழந்தைகளுக்கு சுகமான நித்திரையைக் கொடுக்கும் படுக்கையறை!
சுகமான நித்திரையென்பதே சொகுசானதுதான். அதிலும் குழந்தைகளின் ஆரோகியமான நித்திரையில் பெறோர்களின் ஆரோகியமான நித்திரையும் தங்கியுள்ளதென்பதில் ஐயமில்லை.
அப்படியானால் குழந்தைகளின் படுக்கையறையை எப்படி அமைத்துக்கொள்ளலாம்?
காற்றோட்டம்: மேலத்தேய நாடுகளில் கட்டப்படுகின்ற கட்டடங்களில்/வீடுகளில் ராடோன் ( கதிரியக்கத்தின் சிதைவாலுண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம்) எனப்படுகின்ற ஒருவை நச்சுவாயு படிவதாக ஆய்வாளர்களின் கருத்து. அதனால் ஒரு வருடத்தில் 100 தொடக்கம் 300 வரையிலானவர்கள் நுரையீரல் சம்மந்தமான புற்றுநோய்க்கு ஆளாகுகின்றார்கள் எனக்கணிப்பிடப்படுகின்றது.
எனவே நாம் நம்முடைய குழந்தைகளுக்கு இயன்றளவு சுத்தமான காற்றை சுவாசிக்கும் சூழலை அமைத்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். படுக்கையறையின் கதவை நீங்கள் நித்திரைக்குச் செல்லுமுன் ஒரு ஐந்து நிமிடமாவது நன்கு அகலத்திறந்து விட்டு பின்பு பூட்டிக்கொள்ளலாம். இப்பொழுது கோடை காலமாதலால் எப்பவுமே ஒரு யன்னலையாவது பாதி திறந்து வைத்துக்கொள்ளலாம்.சுத்தமான காற்று உள்வாங்கப்படுகின்றபோது குழந்தைகள் மூச்சுத்திணறலின்றி நித்திரை குழம்பாமல் நித்திரை செய்வார்கள்.
உறைகளை மாற்றுதல்: மேலத்தேய நாடுகளில் நமது கண்ணுக்குத் தெரியாத ஒருவகை மூட்டைப்பூச்சிகள் தலையணைகளிலும் மெத்தைகளிலும் உயிர்வாழ்வதாக இன்னாட்டு சுகாதார அமைப்புக்கள் கூறுகின்றன. அதனால் பலரும் அவதானித்திருப்பீர்கள் உடல் முழுவது எதோ ஊர்வதாய் அல்லது உடம்பில் ஏதாவதொருபகுதி கடிப்பதாய். நாம் பொதுவாக தூசிகளினால் இப்படி இருப்பதாக உணர்ந்து தூசியை தட்டுவதிலேதான் அதிக கவனத்தை செலுத்துகின்றோம். எனவே ஒவ்வொரு கிழமையும் படுக்கையறைத்துணிகளை மாற்றுதல் வேண்டும். அத்துடன் மாதத்தில் ஒரு முறையாவது தலையணை, போர்வை போன்றவற்றை (பஞ்சினாலான)வெளியில் சூரிய ஒளியில் காய விட வேண்டும். வருடத்திலொரு முறையாவது அவற்றை அலசுதல் வேண்டும்.
அழகான உருவப்படங்களை தொங்க விடுதல்: படுக்கையறையில் ஒரு சில படங்களையாவது தொங்கவிடுங்கள். சிறு குழந்தைகளாக இருந்தால் வீட்டு மிருகங்கள் பறவைகள் உள்ள, படங்களுடன் வசனங்கள் எழுதியிருக்கின்ற உருவப்படங்களை கட்டிலுக்கு அருகில்ஒட்டி விடலாம். சிறிது வளர்ந்தவர்களாக இருந்தால் சிந்தனையை தூண்டுகின்ற ஓவியங்களை தொங்கவிடலாம்.
இவை தவிர நவீனமுறையிலமைக்கப்பட்ட மின்குமிழ்கள் கூட படுக்கையறைச் சூழலை இதமாக்கி சுகமான நித்திரையை கொடுக்கின்றது.

எழுதியவர் : யோகராணி (19-Oct-19, 12:17 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 77

மேலே