உதிர்ந்தது பிச்சை ஓட்டில் ஒரு ரோஜா மலர்

ஆலயக் கோபுர வாசல் நிழலில்
அமர்ந்திருந்தான் ஒரு பிச்சைக்காரன் !
மலரொன்று விழுந்தது
அவனது பிச்சை ஓட்டில்
சாதா மலரில்லை மணக்கும் ரோஜா மலர் !
இரு கரங்களிலும் மலரை ஏந்தி
தங்கச்சி எடுத்துச் சூடிக்கொள் என்றான் !
ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்த
அந்த அழகிய பெண்
எடுத்து ரோஜாவை காதோரத்தில் சூடிக்கொண்டாள் !
ஒரு புதிய பெரிய கரன்சி நோட்டை அவன் கைகளில் கொடுத்தாள்
கண்களில் நீர் மல்க அதை ஏற்றுக்கொண்டான்
விழி தெரியா அந்த ஆலய வாசல் பிச்சைக்காரன் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-19, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே