உறவு
இச்சைகள் சாகின்றன...
சமிஞ்சைககளின் சிவப்பினிலே...
மோதிர விரலில்
வீக்கங்கள்
சிலருக்கு..
எப்போதும்
சிறுத்த
தங்க மோதிரங்கள்...
வலியும் வெறுப்பும்
பழகிபோன
வாழ்க்கையின் சலிப்பில்..
ஈடேரா எண்ணங்கள்
வழிநெடுகிலும்
விடாமல் துரத்திடினும்...
ஏனோ ஓர் ஓட்டம்
உலகம் மெச்சவே...
மனம் நிறைய வாழ
மன( ண) மில்லா
இணை...