பட்டாசு இல்லா தீபாவளி
உள்ளத்தில் உவகை
இல்லத்தில் புதுவகை
பட்டாசு இல்லா தீபாவளி
காசை கரியாக்கும்
கண்மூடித்தனமான
பட்டாசு கலாச்சாரம்
வேண்டாம்...
காற்று மண்டலத்தை
மாசுப்படுத்தும்
பொறுப்பற்ற பட்டாசு
விளையாட்டு வேண்டாம்...
தீபத்தோடு மோதி
தன் உயிரோடு விளையாடும்
விட்டில் பூச்சிப்போல்
குழந்தைகளின் விழி தீபத்தில்
பட்டாசு தீப்பொறிகளை
மோதவைக்கும் விபரீதம் வேண்டாம்
புத்தாடை உடுத்துவோம்
புது தின்பண்டங்கள் உண்போம்
ஆலயம் தொழுவோம்
சுற்றத்தோடும் நட்போடும்
கலந்து மகிழ்வோம்
இல்லார்க்கு ஈகை புரிவோம்
பட்டாசு இல்லா தீபாவளி கொண்டாடுவோம்...
அனைவருக்கும்
இனிய பட்டாசுயில்லா
தீபாவளி நல்வாழ்த்துகள்...